Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.. தொடர் சிகிச்சை!

சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

Dhoniயின் பெற்றோருக்கு Corona! Ranchi hospitalல் அனுமதி | OneIndia Tamil

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலை கையை மீறி சென்று கொண்டு இருக்கிறது. தினசரி கொரோனா கேஸ்கள் 2.9 லட்சத்தை தாண்ட தொடங்கி உள்ளது.

இந்தியாவில் தற்போது 15,616,130 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 294,290 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 182,570 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

எப்படி

எப்படி

வீட்டை விட்டு வெளியே போகாதவர்களுக்கு கூட கொரோனா பரவும் அவலம் ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் பெட்கள் இல்லை. இந்தியாவே மொத்தமாக ஆக்சிஜன் இல்லாமல் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் அதிகமாக பதிவாகி வருகிறது.

அதிகம்

அதிகம்

இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் இருந்துள்ளன.

 சோதனை

சோதனை

இதையடுத்து இன்று அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஜார்கண்டில் மருத்துவமனை ஒன்றில் இரண்டு பேருக்கும் தனி தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தோனி ஆடுவார்

தோனி ஆடுவார்

இந்த தகவல் இன்று காலை தோனிக்கு தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கு கொரோனா வந்தாலும் தொடர்ந்து எப்போதும் போல தோனி இன்று மேட்ச் ஆடுவார். அவர் பயோ பபுளில் இருந்து வெளியே செல்ல போவதில்லை. தொடர்ந்து அணியுடன் அவர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, April 21, 2021, 11:07 [IST]
Other articles published on Apr 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+