Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக மாறிய தோனி.. பேட்டிங் ஸ்டைலில் பெரிய வித்தியாசம்.. இந்த ஒரு வீடியோவை பாருங்க.. புரியும்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் பேட்டிங் ஸ்டைல் பெரிய அளவில் மாறியுள்ளது.

2021 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று மும்பையில் நடக்க உள்ளது.

இந்த போட்டிக்காக மும்பையில் சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. கேப்டன் தோனி கடந்த ஒரு மாதமாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பயிற்சி

பயிற்சி

கடந்த சீசனில் தோனி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 40+ ரன்கள் எடுத்தார். வேறு எந்த போட்டியிலும் சரியாக தோனி ஆடவில்லை. அந்த போட்டியில் தோனி மிக மோசமான பார்மில் இருந்தார். பந்தை சரியாக கணிக்க கூட முடியாமல் திணறினார்.

ஸ்பின்

ஸ்பின்

முக்கியமாக ஸ்பின் பவுலிங்கில் கடுமையாக திணறினார். பொதுவாக தோனி பெரிய அளவில் ஸ்வீப் ஷாட்களை ஆட மாட்டார். இதனால் ஸ்பின் பவுலிங்கில் போன முறை ஈசியாக அவுட் ஆனார். தோனியின் சரிவிற்கு இதுதான் பெரிய காரணமாக இருந்தது.

ஆனால்

ஆனால்

ஆனால் இந்த முறை தோனி தனது பேட்டிங் ஸ்டைலை பெரிய அளவில் மாற்றி உள்ளார். ஸ்பின் பவுலிங்கை மனதில் வைத்து நிறைய ஸ்வீப் ஷாட்களை அடிக்க தொடங்கி உள்ளார். நேற்று தோனி பயிற்சி மேற்கொண்ட வீடியோவை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. இதில் தோனி அதிரடியாக நிறைய ஸ்வீப் ஷாட்களை அடித்துள்ளார்.

ஆட மாட்டார்

பொதுவாக இப்படி ஆடாத தோனி, இந்த வீடியோவில் வித்தியாசமாக பந்தை எதிர்கொண்டுள்ளார். நிறைய பந்துகளை திருப்பி அடித்து சிக்ஸ் பறக்க விட்டுள்ளார். கடந்த சீசனில் சிக்ஸ் அடிக்க தோனி கடுமையாக திணறினார். ஆனால் இந்த முறை பயிற்சி ஆட்டத்தில் தோனி தொடர்ந்து சிறப்பாக சிக்ஸ்களை பறக்கவிடுகிறார்.

பார்ம்

பார்ம்

தோனி ஆடும் விதத்தை பார்த்தால் அவர் பார்மிற்கு திரும்பிவிட்டது போல தோன்றுகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக இவர் பயிற்சி மேற்கொள்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் கண்டிப்பாக தோனி அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 10, 2021, 17:38 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+