Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிறந்தநாளன்று மொக்கை வாங்கிய ரிஷப்.. தோனி கொடுத்த அசால்ட் பதில்.. ரசிகர்கள் சிரிப்பு!

துபாய்: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பிறந்த நாளன்றே ரிஷப் பண்ட் மொக்கை வாங்கியது ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.

ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இரு அணிகளுமே ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது என்பதால் இது பலசாலியை தீர்மானிக்க வேண்டிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

டெல்லி - சிஎஸ்கே

டெல்லி - சிஎஸ்கே

இந்தாண்டுக்கான ஐபிஎல்-ல் இதுவரை இரு அணிகளுமே 12 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி முதல் இடத்திலும் டெல்லி அணி 2வது இடத்திலும் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்தை உறுதி செய்துவிடும் என்பதால், இரு பெரும் அணிகளும் கடுமையாக மோதி வருகின்றன.

கேப்டனின் பிறந்தநாள்

கேப்டனின் பிறந்தநாள்

இப்படிபட்ட முதல் போட்டி தினத்தன்று தான் ரிஷப் பண்ட்-க்கும் சிறப்பான நாளாக அமைந்திருக்கிறது. அதாவது இன்று டெல்லி அணிக் கேப்டன் ரிஷப் பண்ட் 24 வது பிறந்தாளை கொண்டாடுகிறார். இதனால் உற்சாகமாக சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கான டாஸுக்கு வந்த ரிஷப் பண்ட் தோனியிடம் மொக்கை வாங்கி சென்றுள்ளார்.

மகிழ்ச்சியில் பண்ட்

மகிழ்ச்சியில் பண்ட்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். துபாய் மைதானம் கடந்த சில போட்டிகளில் 2வதாக பேட்டிங் செய்ய தான் உதவுவதால், இந்த முடிவை எடுத்ததாக கூறினார். பிறந்தநாளன்று டாஸ் வென்றுவிட்டேன், அதுவும் தோனிக்கு எதிராக டாஸ் வென்றுவிட்டேன் என புன்னகை முகத்துடன் ரிஷப் பண்ட் பேசி வந்தார். இதற்கு அருகில் இருந்த முன்னாள் வீரரும் வாழ்த்து கூறினார்.

மொக்கை வாங்கிய பண்ட்

மொக்கை வாங்கிய பண்ட்

ஆனால் பண்ட்-க்கு அடுத்ததாக பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, நாங்கள் டாஸ் வெல்லவில்லை என்பது சரிதான், ஆனால் நான் டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்பேன். எனக்கொன்றும் துபாய் பிட்ச்- 2வது பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பது போல தெரியவில்லை. நன்றாக தான் இருக்கிறது. எனவே பேட்டிங் தான் செய்திருப்போம் என சிரித்துக்கொண்டே தெரிவித்தார். அப்போது கேமராவில் பண்ட்-ன் முகத்தை காட்ட, ரசிகர்கள் சிரிக்க தொடங்கினர். டாஸில் மொக்கை வாங்கினாலும், ஆட்டத்தில் ரிஷப் பண்ட் சாதிப்பாரா என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.

Story first published: Monday, October 4, 2021, 20:52 [IST]
Other articles published on Oct 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+