Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பு பண்ணதே தோனிதான்.. நேற்று மாலை நடந்த குளறுபடி.. குற்றஞ்சாட்டும் வல்லுநர்கள்? முழு பின்னணி

மும்பை: டெல்லிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் தோனி செய்த தவறு ஒன்றுதான் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாகிவிட்டதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆப் கூட செல்ல முடியாமல் தோல்வி அடைந்து வெளியேறியது. அந்த சீசனில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே காரணமாக இருந்தது.

இந்த நிலையில், இந்த முறை பேட்டிங் ஆர்டரில் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்றபடி சிஎஸ்கே ஆட்களை ஏலம் எடுத்தது. அணியில் இருக்கும் 11 பேரும் பேட்டிங் செய்யும் வகையில் சிஎஸ்கே அணி வீரர்களை தேர்வு செய்தது.

நேற்று

நேற்று

நேற்று டெல்லிக்கு எதிரான முதல் ஆட்டத்திலும் ரூத்துராஜ் தொடங்கி சாஹர் வரை எல்லோரும் பேட்டிங் செய்ய கூடியவர்கள். மும்பை மைதானம் பேட்டிங் பிட்ச். இங்கு அதிக ரன் அடித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். இதனால் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களை குறி வைத்து நேற்று தோனி வீரர்களை தேர்வு செய்தார்.

ஆனால்

ஆனால்

ஆனால் தோனியின் இந்த அணி தேர்வுதான் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாகிவிட்டதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். தோனி முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்கள் மீது கவனம் செலுத்தி வீரர்களை தேர்வு செய்துள்ளார். இது தவறு. அணியில் விக்கெட் எடுக்க கூடிய பவுலர்கள் யாரும் இல்லை.

பவுலர்கள்

பவுலர்கள்

சாஹர், பிராவோ, சாம் கரன் என்று பாஸ்ட் பவுலர்கள் யாரும் விக்கெட் எடுக்க கூடியவர்கள் இல்லை. ஷரத்துல் விக்கெட் எடுப்பார் என்றாலும் அவர் அதிக ரன் கொடுப்பார். பும்ரா, நடராஜன் போல விக்கெட் எடுக்க கூடிய, ரன்னை கட்டுப்படுத்த கூடிய வீரர்கள் யாரும் இல்லை. இதுதான் தோனி செய்த தவறு என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தவறு

தவறு

நேற்று பிராவோவிற்கு பதிலாக முழு நேர பாஸ்ட் பவுலர்களை எடுத்து இருக்க வேண்டும். மும்பை பிட்சில் அப்படி ஒருவரை இறக்கினால்தான் சேஸ் செய்யும் போது வசதியாக இருக்கும். ஆனால் தோனி பேட்டிங் ஆர்டர் மீது கவனம் செலுத்தி பவுலிங் ஆர்டரில் சொதப்பிவிட்டார்.

பவுலிங் ஆர்டர்

பவுலிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டரின் வலிமையை உயர்த்துகிறேன் என்று கூறி, பவுலிங் ஆர்டரின் வலிமையை குறைத்துவிட்டார். டீம் சமநிலையாக இல்லை. தோனி எடுத்த இந்த தவறான முடிவுதான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Story first published: Sunday, April 11, 2021, 10:40 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+