Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிமே தூக்கணும்னா.. தோனியத்தான் தூக்கணும்.. பலருக்கு போடப்பட்ட "ஸ்கெட்ச்'.. கவலையில் சிஎஸ்கே டீம்!

சென்னை: சிஎஸ்கே அணியில் தோனியின் சமீபத்திய பார்ம் ரசிகர்களையும், அணி நிர்வாகத்தையும் கவலை அடைய செய்துள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் மோசமாக ஆடிய சிஎஸ்கே அந்த தொடரில் பிளே ஆப் கூட செல்லாமல் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியில் ரெய்னா திரும்பி வந்துள்ளார். அதேபோல் அணியில் மொயின் அலியும் எடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் வலிமையாகி உள்ளது. பவுலிங் மட்டும் கொஞ்சம் சொதப்பலாக உள்ளது.

மோசம்

மோசம்

சிஎஸ்கே அணியில் தற்போது மோசமாக இருக்கும் ஒரே விஷயம் தோனியின் பேட்டிங்தான். கடந்த 2019 உலகக் கோப்பைக்கு பின் தோனி சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை. கடந்த 2020 ஐபிஎல் போட்டியில் ஒரே ஒரு மேட்சில் 44 ரன்கள் எடுத்தார். மற்ற போட்டியில் எல்லாம் சொதப்பினார்.

கடந்த மேட்ச்

கடந்த மேட்ச்

கடந்த மேட்சிலும் மோசமாக ஆடிய தோனி இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆனார். தோனி கடந்த இரண்டு வருடமாக பார்மில் இல்லை. தோனியின் இந்த மோசமான பார்ம் சிஎஸ்கே ரசிகர்களையும், அணி நிர்வாகிகளையும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த வருடமும் போன வருடம் போல ஆகிவிடுமோ என்று அஞ்ச தொடங்கி உள்ளனர்.

அச்சம்

அச்சம்

அதோடு ஒரு கேப்டனாகவும் சிஎஸ்கே அணியில் தோனி சரியாக முடிவு எடுக்கவில்லை. நேற்று தோல்வி அடைய வேண்டிய போட்டியை கூட கேப்டன் ரோஹித் மீட்டு எடுத்தார். சஞ்சுவும் ஒரு கேப்டனாக ராஜஸ்தான் அணியை மீட்க கடைசி வரை போராடினார். ஆனால் முதல் போட்டியில் தோனி அப்படி எதுவும் செய்யவில்லை.

தோல்வி

தோல்வி

தோல்வி அடைய போகிறோம் என்று தெரிந்ததும் தோனி மனசை விட்டுவிட்டார். பெரிதாக போராடாமல், பிளான் பியை கொண்டு வராமல் சொதப்பினார். தோனியின் கேப்டன்சி யூகிக்க கூடிய வகையில் உள்ளது. இதுவும் சிஎஸ்கே அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாகி உள்ளது. இதை பற்றி பேன்ஸும் புலம்ப தொடங்கி உள்ளனர்.

மாற்றம்

மாற்றம்

சிஎஸ்கே ரசிகர்கள் பலர் இப்போதே.. இனிமே அணியில் மாற்றம் செய்யணும்னா தோனியைதான் நீக்கணும்.. அவர்தான் சரியில்லை. அவர் பார்மிற்கு வரணும். இல்லை இளைஞர்களுக்கு வழி விடணும் என்று கூற தொடங்கி உள்ளனர். ஆனால் தோனி மீது சிஎஸ்கே அணி நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்காது என்கிறார்கள். மாறாக சரியாக பவுலிங் செய்த வீரர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் முடிவில் சிஎஸ்கே நிர்வாகம் இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Wednesday, April 14, 2021, 16:27 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+