Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண் அசைவிற்காக காத்திருக்கும் 3 பேர்.. "தமிழர்களை" புறக்கணிக்கும் தோனி.. நேற்று நடந்த பரபர சம்பவம்

சென்னை; சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்களை கேப்டன் தோனி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இது தொடர்பாக நெட்டிசன்கள் பலர் கொதித்து போய் உள்ளனர்.

Recommended Video

தமிழக வீரர் Shahrukh Khan-க்கு அறிவுரை வழங்கிய Dhoni.. வைரலாக புகைப்படம்

2021 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். டெல்லி அணியில் மூத்த வீரர் அஸ்வின் அதிரடி காட்டிக்கொண்டு இருக்கிறார்.

இன்னொரு பக்கம் சேலம் எக்ஸ்பிரஸ் நடராஜன் ஹைதரபாத் அணியில் தொடர்ந்து முழு பார்மோடு ஆடிக்கொண்டு இருக்கிறார். இரண்டு பேருமே அவர்கள் அணியில் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளனர்.

வேறு யார்

வேறு யார்

இது போக கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி சென்ற வருடம் போலவே இந்த வருடமாக குறைந்த ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். பெங்களூர் அணியில் ஆடும் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கலக்கி ஆல் ரவுண்டராக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

நேற்று

நேற்று

நேற்று சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியில் ஆடும் தமிழக வீரர் ஷாருக்கான் இதேபோல் அதிரடியாக ஆடினார். தொடக்கத்தில் இருந்து இறுதிவரை ஷாருக்கான் நேற்று சிறப்பாக ஆடினார். பஞ்சாப் அணியில் எல்லா வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் ஷாருக்கான் மட்டும் 47 ரன்கள் எடுத்தார்.

முருகன்

முருகன்

அதேபோல் பஞ்சாப் அணியின் பவுலர் முருகன் அஸ்வின் மிக சிறப்பாக கூக்ளி பவுலிங் செய்து கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் போது சிஎஸ்கே அணியில் மட்டும் தமிழர்கள் இருந்தும் கூட அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சாய் கிஷோர் ஆகிய தமிழர்கள் அணியில் உள்ளனர்.

வாய்ப்பு

வாய்ப்பு

தோனி தங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று இவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் தோனியோ தொடர்ந்து தமிழக வீரர்களை புறக்கணித்து வருகிறார். சரியான பார்மில் இல்லாத ருத்துராஜுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகிறார். இவருக்கு பதிலாக தமிழக ஓப்பனர்களை இறக்கலாம்.

யார்

யார்

ஹரி நிஷாந்த், ஜெகதீசன் இரண்டு பேருமே சையது முஷ்டாக் கோப்பை தொடரில் சிறப்பாக ஆடினார்கள். இவர்களை ருத்துராஜுக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் இறக்கலாம். ஆனால் இவர்களை கொஞ்சம் கண்டுகொள்ளாமல் தோனி தொடர்ந்து புறக்கணித்துக்கொண்டே இருக்கிறார்.

Story first published: Saturday, April 17, 2021, 12:57 [IST]
Other articles published on Apr 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+