டிராக் ரெக்கார்ட் மோசம்.. இனி இவரை நம்ப கூடாது.. சாட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயத்தில் தோனி.. பின்னணி
சென்னை: சிஎஸ்கே அணி உடனடியாக தனது பவுலர்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முக்கியமாக இரண்டு வருடமாக அணியில் சொதப்பி வரும் ஒருவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. கடந்த சீசனிலேயே சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்ல முடியாமல் சொதப்பியது.
சிஎஸ்கே அணி இந்த வருடம் தனது பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்திவிட்டு களமிறங்கி உள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் சிஎஸ்கேவின் பவுலிங் பலம் மோசமாகி உள்ளது.

பவுலிங்
சிஎஸ்கேவில் தற்போது இருக்கும் பவுலர்கள் யாரும் விக்கெட் டேக்கிங் பவுலர்களாக இல்லை. முக்கியமாக சாகர் பெரிய அளவில் பார்மில் இல்லை. பேட்டிங் பவர்பிளேவில் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் வீசுவதுதான் சாகரின் பலம். இவரை அணியில் எடுத்ததே ஸ்விங் போடுவார் என்பதால்தான்.

ஆனால் என்ன
2018, 2019 சீசன்களில் இவரின் பவுலிங் நன்றாக இருந்தது. எதிர்பார்த்ததை விட இவர் சிறப்பாகவே ஸ்விங் செய்தார். ஆனால் கடந்த வருடம் இவரின் பவுலிங் பெரிதாக ஸ்விங் ஆகவில்லை. பல முறை அதிக ரன்களை கொடுத்து விக்கெட் எடுக்க முடியாமல் மோசமாக திணறினார்.

திணறல்
அதன்பின் இந்திய அணிக்காக இவர் ஆடிய சர்வதேச போட்டிங்களிலும் சரியாக விக்கெட் எடுக்கவில்லை .ஆஸ்திரேலியாவிற்கு தொடரில் சில போட்டிகளில் ரன்களை வாரி வழங்கினார். நேற்று நடந்த போட்டியிலும் இவர் மோசமாக பவுலிங் செய்தார். நேற்று டெல்லிக்கு எதிராக 4 ஓவர் வீசி 36 ரன்கள் கொடுத்த சாகர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

போச்சு
இவர் சரியான லைனில் பவுலிங் செய்யவில்லை. அதேபோல் பந்து ஸ்விங் ஆகவில்லை. பவுன்சர் வீசவில்லை. ஸ்லோ பால் மட்டுமே நேற்று அதிகம் வீசினார். கடந்த இரண்டு வருடமாக இவரின் பவுலிங் பார்மில் இல்லை. ஆனால் இவரைத்தான் சிஎஸ்கே டாப் பவுலராக நம்பி களமிறங்கி உள்ளது.

பவுலர்
இவர்தான் பவுலிங் அணியை வழி நடத்துகிறார். இவரின் இரண்டு வருட டிராக் ரெக்கார்ட் மோசமாக இருப்பதால் உடனே தோனி முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வேறு நல்ல இந்திய பாஸ்ட் பவுலரை எடுக்க வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications