Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் சிஎஸ்கே டீம்.. வெற்றிக்கு பின் தோனி சொன்ன "அந்த" வார்த்தை.. அணிக்கு உதவும் சூட்சமம்!

சென்னை: ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று சிஎஸ்கே வென்ற நிலையில் கேப்டன் தோனி சிஎஸ்கே அணி குறித்த முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Recommended Video

Kedar Jadhavவிடம் சிரித்து பேசிய Dhoni, Raina video Viral | Oneindia Tamil

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வென்றது. தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சிஎஸ்கே எளிதாக வெற்றிபெற்றது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிங்கிய சிஎஸ்கே வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

தோனி

தோனி

இந்த போட்டியில் வெற்றிக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, சிஎஸ்கேவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. பவுலிங்கும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது. இந்த பிட்ச் எங்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது. டெல்லிக்கு நாங்கள் வந்த போதெல்லாம் இப்படி ஒரு பிட்சை எதிர்பார்த்தது இல்லை.

ஸ்பின்

ஸ்பின்

ஸ்பின் பவுலிங்கிற்கு பிட்ச் பெரிய அளவில் சாதகமாக இல்லை. பனி பெரிதாக பெய்யவில்லை. 170 ரன்களை கண்டிப்பாக அடிக்க முடியும் என்று நம்பிக்கை இருந்தது. முதல் நாள் இரவே இதற்கான திட்டங்களை வகுத்து இருந்தோம்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

அணியின் ஓப்பனிங் வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். கடந்த வருடம் எங்களுக்கு அமையாத தொடக்கம் இந்த வருடம் அமைந்தது. சீக்கிரமே எங்கள் டீம் செட் ஆனது மகிழ்ச்சி தருகிறது. 5 மாதமாக பலர் கிரிக்கெட் ஆடவில்லை. இதுதான் எங்களுக்கு கொஞ்சம் சவாலாக இருந்தது.

 பொறுப்பு

பொறுப்பு

இந்த வருடம் அணியில் இருக்கும் வீரர்கள் இன்னும் பொறுப்போடு ஆடுகிறார்கள். இந்த வருடம் எல்லாம் சிறப்பாக இருகிறது. கடந்த 8-10 வருடத்தில் எங்கள் அணியில் நாங்கள் பெரிதாக வீரர்களை மாற்றவில்லை. அதனால் நாங்கள் எப்படி ஆடுவோம் என்று சக வீரர்களுக்கு தெரியும்.

வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

அதேபோல் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களுக்கு நாங்கள் எப்போதும் எங்கள் பாராட்டுகளை தெரிவிப்போம். வாய்ப்பு கிடைக்காத வீரர்களை தொடர்ந்து பாராட்டுவோம். இதுதான் சிஎஸ்கே அணியில் நிலவும் ஒற்றுமைக்கு முக்கிய காரணம் என்று கேப்டன் தோனி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, April 29, 2021, 10:50 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+