"அங்கு ஒருத்தனை காணோம்".. பாதி போட்டியில் புலம்பிய தோனி.. வெளியான பரபர வீடியோ - என்ன நடந்தது?
சென்னை: நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி பாதி போட்டியில் புலம்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. மும்பையில் முதலில் பேட்டிங் செய்தால் வெல்வது கடினம் என்ற கதையை மாற்றி சிஎஸ்கே புதிய வரலாற்றை நேற்று படைத்தது.
நேற்று சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் சிறப்பாக இருந்தது. ஆனாலும் சிஎஸ்கே வீசிய முதல் 10 பவுலர்களில் நேற்று அதிகமாக ரன்கள் சென்றன.

2 விக்கெட்
நேற்று சிஎஸ்கேவின் முதல் 10 ஓவர்கள் சிறப்பாக இல்லை. 2 விக்கெட் மட்டுமே விழுந்தது. பெரிய அளவில் சாகர் தொடங்கி ஷரத்துல் வரை பெரிதாக பவுலிங்கில் அழுத்தம் கொடுக்கவில்லை. இதனால் தோனி களத்தில் கொஞ்சம் கோபத்தோடு காணப்பட்டார்.

திட்டினார்
பீல்டர்களை நிற்க வைக்கும் போது அவர்களை திட்டியபடி இருந்தார். ஒரு பவுலர் சின்னதாக தவறு செய்தாலும் அவர்களிடம் தோனி கோபத்தை காட்டினார். தோனி இப்படி சிஎஸ்கே வீரர்களை திட்டியது அங்கு இருக்கும் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இந்தியில் இளம் வீரர்களை திட்டிக்கொண்டு இருந்தார்.

என்ன சொன்னார்
நேற்று பீல்டிங் நிற்க வைக்கும் போது தீப் பைன் லெக் திசையில் யாரும் இல்லை. இதை பார்த்ததும் தோனி கோபம் அடைந்தார். அங்க இருந்த ஆள் எங்கே... ஏன் அந்த இடத்தில் ஒரு வீரர் எப்போதும் ஒருத்தர் மிஸ் ஆகிக்கொண்டே இருக்கிறார், அங்கே போய் ஒருவர் நில்லுங்கள் என்று தோனி கோபமாக கத்தினார்.
வீடியோ
அங்கு ஒருத்தனை காணோம் என்று பொருள்படும் வகையில் தோனி இந்தியில் பேசினார். தோனி இப்படி கோபமாக கத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி பொதுவாக கேப்டன்சியில் கூலாக இருப்பார். ஆனால் இந்த சீசனில் அவர் தொடக்கத்தில் இருந்தே டென்ஷனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications