Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக "கம்பேக்" தர முடிவு.. சிஎஸ்கேவில் தோனி செய்ய போகும் முக்கிய மாற்றம்.. தில்லான முடிவுதான்

சென்னை: சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனி மீண்டும் தனது பேட்டிங் ஆர்டரை மாற்ற போவதாக தகவல்கள் வருகின்றன.

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றிகரமாக ஆடி வருகிறது. முதல் போட்டியில் டெல்லியிடம் சிஎஸ்கே தோல்வியை தழுவியது.

ஆனால் அதன்பின் வரிசையாக சிஎஸ்கே தொடர் வெற்றிகளை குவித்தது. இதுவரை 4 போட்டிகளில் சிஎஸ்கே வென்றுள்ளது.

எளிமை

எளிமை

சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆப் செல்வது எளிதாகி உள்ளது. இன்னும் 4 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும். சிஎஸ்கே அணியில் கிட்டத்தட்ட எல்லா வீரர்களும் பார்மிற்கு திரும்பிவிட்டனர் என்றுதான் கூற வேண்டும்.

பார்ம்

பார்ம்

தற்போது சிஎஸ்கேவில் தோனி மட்டுமே பார்மில் இல்லை. அவர் மட்டுமே சரியான ரிதம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். இதனால் வரும் போட்டிகளில் தோனி தனது பேட்டிங் ஆர்டரை மாற்றுவார் என்று கூறுகிறார்கள்.

மாற்ற போகிறார்

மாற்ற போகிறார்

இப்போது 5 அல்லது 6வது வீரராக ராயுடுவிற்கு பின் தோனி இறங்கி வருகிறார். இனி மேல் 4வது வீரராக இறங்குவார் என்று கூறுகிறார்கள். மொயின் அலி இல்லாத போட்டிகளில் 4வது வீரராக தோனி இறங்குவார் என்று தகவல்கள் வருகின்றன.

ஏன்

ஏன்

தோனி முழுமையாக பார்மிற்கு திரும்பும் முடிவில் இருக்கிறார். இதற்காக அவர் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றுவார் என்று தகவல்கள் வருகின்றன. இன்று நடக்கும் போட்டியிலும் அவர் சீக்கிரமே பேட்டிங் இறங்க வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, April 28, 2021, 20:29 [IST]
Other articles published on Apr 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+