Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ இப்படி பண்ணி பார்த்ததே இல்லைடா.. பாதி மேட்சில் தமிழில் புலம்பிய டிகே.. மைக்கில் பதிவான பரபர ஆடியோ

சென்னை: பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் தமிழில் புலம்பியது வைரலாகி வருகிறது. இவர் தமிழில் புலம்பியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி எல்லோருக்கும் கேட்டது.

Recommended Video

Match நடுவே தமிழில் புலம்பிய Dinesh Karthick | KKR vs RCB | IPL 2021 | Oneindia Tamil

கொல்கத்தாவிற்கும் பெங்களூருக்கு இடையிலான டி 20 போட்டி சென்னையில் விறுவிறுப்பான நடந்து வருகிறது. இதில் பெங்களூர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது. முதலில் இரண்டு விக்கெட்டை இழந்த பெங்களூர் அதன்பின் சுதாரித்து அதிரடி காட்ட தொடங்கியது.

முக்கியமாக பெங்களூர் அணியின் மேக்ஸ்வெல் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி கொல்கத்தா பவுலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

வருண்

வருண்

இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தி தொடக்கத்தில் நன்றாகவே பவுலிங் செய்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே வருண் சக்ரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். கோலி மற்றும் பட்டிடார் விக்கெட்டுகளை வருண் சக்ரவர்த்தி ஒரே ஓவரில் எடுத்தார். அதன்பின் இவருக்குத்தான் ஓவர் கொடுத்திருக்க வேண்டும்.

இயான் மோர்கன்

இயான் மோர்கன்

ஆனால் இயான் மோர்கன் இவருக்கு ஓவருக்கு கொடுக்கவில்லை. பவர் பிளேவில் இவருக்கு வருண் சக்கரவர்த்திக்கு ஓவர் கொடுக்காமல் இயான் மோர்கன் தவறு செய்தார். பின் 8வது ஓவர்தான் வருண் சக்ரவர்த்தி ஓவர் போட வந்தார். ஆனால் இந்த ஓவரில் அவரின் லைன் மற்றும் லென்த் சரியில்லை.

நோ பால்

நோ பால்

இதில் முதல் பாலே வருண் நோ பால் கொடுத்தார். இதை பார்த்ததும் டிகே கோபம் அடைந்தார். அதற்கு அடுத்து, ஃபீரி ஹிட் பாலில் மேக்ஸ்வெல் சிக்ஸ் அடித்தார். பின் அடுத்த பாலிலும் வருண் மேக்ஸ்வெல்லுக்கு பவுண்டரி கொடுத்தார். இதை பார்த்ததும் தினேஷ் கோபம் அடைந்தார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

வருணிடம் தமிழில் பேசிக்கொண்டு இருந்தே தினேஷ் கார்த்திக் அவரிடம்.. டேய் நீ இப்படி எல்லாம் போட்டு பார்த்ததே இல்லைடா.. என்னாச்சு.. சரியா போடுடா.. என்று கொஞ்சம் கோபமாக புலம்பியபடியே கூறினார். ஆனால் அதே ஓவரில் வருண் கம்பேக் கொடுத்து மீதமுள்ள பந்துகளில் ரன் செல்வதை கட்டுப்படுத்தினார்.

Story first published: Sunday, April 18, 2021, 16:55 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+