Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாத்துக்கும் இவர்தான் காரணம்.. கோபத்தின் உச்சியில் பேட்டை வீசிய தினேஷ் கார்த்திக்.. ஏதோ சரியில்லை

சென்னை; நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் தினேஷ் கார்த்திக் சரியாக பேட்டிங் செய்யாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நெற்றி மும்பை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெரிய அளவில் அதிரடி காட்டாமல் 20 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 152 ரன்களை மட்டும் எடுத்தது.

இந்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. வெற்றிபெற வாய்ப்பு இருந்த போட்டியில் மோசமாக ஆடி கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

இந்த போட்டியில் டெயில் எண்டர்கள் பேட்டிங்தான் மோசமாக இருந்தது. முக்கியமாக கொல்கத்தாவின் பினிஷர் தினேஷ் கார்த்திக் மிக மோசமாக ஆடினார். பொதுவாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக பினிசிங் செய்ய கூடியவர். இக்கட்டான நிலையில் மேட்சை மாற்ற கூடிய திறமை கொண்டவர்.

கடந்த மேட்ச்

கடந்த மேட்ச்

கடந்த ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் கூட தினேஷ் கார்த்திக் கடைசியில் வந்து 9 பாலில் 22 ரன்கள் எடுத்தார். ஆனால் நேற்று போட்டியில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸ், பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறினார். நன்றாக சென்று கொண்டு இருந்த போட்டியை காலி செய்ததில் இவருக்கும் பங்கு உண்டு. தினேஷ் கார்த்திக் இறங்கிய போது வெற்றிபெற 30 ரன்கள் தேவை.

பங்கு

பங்கு

ஆனால் அதை கூட இவரால் அடிக்க முடியவில்லை. பந்தை சரியாக கணித்து அடிக்க முடியாமல் திணறினார். பவுண்டரி தேவைப்பட்ட நேரங்களில் இவர் சிங்கிள் எடுத்தார். தேவையின்றி பிரஷரை அதிகப்படுத்தி, சொதப்பினார். எப்போதும் நன்றாக ஆடும் தினேஷ் கார்த்திக், மிகவும் டென்ஷனாக காணப்பட்டார்.

கோபம்

கோபம்

நேற்று இவரிடம் எதோ சரியில்லாதது போல தெரிந்தது. போட்டிக்கு பின்பாக மைதானத்தில் பேட்டை கோபமாக தட்டிய தினேஷ் கார்த்திக், அதன்பின் பெவிலியன் சென்றதும் பேட்டை வீசினார். சென்னை பிட்ச் தினேஷ் கார்த்திக்கு பழக்கமான பிட்ச். ஆனால் இதில் கூட சொதப்பி, கொல்கத்தா அணியின் தோல்விக்கு இவரே காரணமாக அமைந்துவிட்டார்.

Story first published: Wednesday, April 14, 2021, 8:39 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+