Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

244 ஆ?.. எத்தனை நாள் ஏக்கம்.. வெகுண்டெழுந்த தினேஷ் கார்த்திக்.. ஒரே மேட்சில் கோலிக்கு தரமான பதிலடி

சென்னை: இந்திய அணியில் செய்யப்படும் தொடர் புறக்கணிப்புகளுக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று தனது தரமான பினிஷிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. கொல்கத்தா அணி நேற்று முதலில் பேட்டிங் செய்து தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ரன் குவித்தது.

முக்கியமாக ராணா, ராகுல் இருவரும் அரை சதம் அடித்து கொல்கத்தா அணிக்கு மிக சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

ஆனால்

ஆனால்

ஆனால் கொல்கத்தா அணி மிடில் ஆர்டரில் கொஞ்சம் திணறியது. ராணா, ராகுல் அவுட் ஆன பின் ரன் செல்வது குறைந்தது. முக்கியமாக ரசல், இயான் மோர்கன் வந்த வேகத்தில் அவுட் ஆனார்கள். இதனால் மிடில் ஓவர்களில் ரன் செல்வது வேகமாக குறைந்தது. கொல்கத்தா இங்கு கொஞ்சம் பின் தங்கியது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

ஆனால் இவர்களுக்கு அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் கொல்கத்தாவிற்காக முதல் இன்னிங்க்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். முதல் 2 பந்துகளை செட் ஆவதற்கு எடுத்துக்கொண்ட தினேஷ் கார்த்திக் அதன்பின் அதிரடி காட்டினார். நேற்று 9 பந்துகள்தான் தினேஷ் கார்த்திக் பிடித்தார்.

பக்கா பேட்டிங்

பக்கா பேட்டிங்

ஆனால் அந்த 9 பந்துகளில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடக்கம். இவரின் ஸ்டிரைக் ரேட் நேற்று 244.44. சையது முஷ்டாக் கோப்பையில் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் அந்த பார்மை ஐபிஎல் போட்டிகளிலும் தக்க வைத்துள்ளார். நேற்று கொல்கத்தாவை சரிவில் இருந்து மீட்டு 187 ரன்களுக்கு கொண்டு சென்றது இவரின் பினிஷிங்தான்,

சிறப்பு

சிறப்பு

அதிலும் இவர் நேற்று அடித்தது எல்லாம் நடராஜன், புவனேஷ்வர் குமார் போன்ற சிறப்பான டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டுகளின் பவுலிங்கில்தான். கடைசி இரண்டு ஓவர்களில், சென்னை பிட்சில் இப்படி அடிப்பது எல்லாம் ரொம்ப கஷ்டம். ஆனால் தினேஷ் கார்த்திக் நேற்று அசால்டாக ஆடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இவர் அடித்த ரன்தான் நேற்று கொல்கத்தாவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் வேறுபாடாக இருந்தது.

பதிலடி

பதிலடி

இந்த போட்டி மூலம் இந்திய அணியில் தன்னை புறக்கணிக்கும் கோலிக்கும் தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு பின் தினேஷ் கார்த்திக்கை கோலி எடுக்கவில்லை. கோலியின் அணி தேர்வு புறக்கணிப்பிற்கு எல்லாம் தற்போது ஒரே மேட்சில் தினேஷ் கார்த்திக் தனது பினிஷிங் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Monday, April 12, 2021, 15:27 [IST]
Other articles published on Apr 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+