Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"போடு ****".. ரோஹித் அருகில் நின்று.. தமிழில் கெட்ட வார்த்தையில் திட்டிய டிகே.. வைரலாகும் வீடியோ!

சென்னை: நேற்று மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் கெட்ட வார்த்தையில் பேசியது வைரலாகி உள்ளது.

கொல்கத்தா அணியில் ஆடி வரும் தமிழக வீரர் மைதானத்தில் சக தமிழக வீரர்களிடம் தமிழில் பேசுவார். வருண் சக்ரவர்த்தி பவுலிங் போட வந்தாலே தமிழில் பேசி தினேஷ் கார்த்திக் அவருக்கு அறிவுரை வழங்குவார்.

இப்படி போடு மச்சான்.. நல்லா போட்டு இருக்க.. பந்தை உள்ள போடு என்று தொடர்ந்து அறிவுரை வழங்குவதை தினேஷ் கார்த்திக் வழக்கமாக வைத்துள்ளார்.

வழக்கம்

வழக்கம்

பொதுவாக தமிழக வீரர்கள் எல்லோரிடமும் தினேஷ் கார்த்திக் இப்படி தமிழில்தான் பேசுவார். இவர் தமிழில் பேசும் வீடியோக்கள் பல முறை வைரலாகி உள்ளது. பொதுவாக இவர் தமிழில் பேசும் போது தமிழ் கமெண்டரி நிறுத்தப்பட்டு இவர் பேசுவது அப்படியே ஒளிபரப்பப்படும்.

என்ன

என்ன

இந்த நிலையில் நேற்றும் இதேபோல் வருண் சக்ரவர்த்தியிடம் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசினார். ஒவ்வொரு பந்தையும் எப்படி வீச வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்திக்கு அறிவுரை வழங்கினார். இதனால் 4 ஓவர் வீசிய வருண் வெறும் 27 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

திட்டினார்

திட்டினார்

இப்படிப்பட்ட நிலையில் நேற்று ரோஹித் அருகில் நின்று கொண்டு இருந்த தினேஷ் கார்த்திக் தமிழில் கெட்ட வார்த்தையில் கத்தினார். *** போடு என்று வருண் சக்ரவர்த்தியை பார்த்து கூறினார். ஆனால் இதை கோபமாக திட்டும் விதத்தில் தினேஷ் கார்த்திக் பயன்படுத்தவில்லை.

பேச்சு

பேச்சு

வடிவேலிடம் அர்ஜுன் சொல்வது போல flowவில் போகிற போக்கில் இப்படி பேசினார். வருண் சக்கரவர்த்தியை சரியாக போட சொல்லும் வகையில் இப்படி பேசினார். தினேஷ் கார்த்திக் நேற்று மைதானத்தில் ஸ்டம்ப் மைக் அருகே இப்படி கெட்ட வார்த்தை பேசிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

Story first published: Wednesday, April 14, 2021, 11:40 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+