Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க எடுத்த முடிவுதான்.. உண்மையை போட்டு உடைத்த வார்னர்.. ஹைதராபாத் அணிக்குள் பிளவா? - பின்னணி

சென்னை: ஹைதராபாத் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

உண்மையை உடைத்த Warner..SRH அணிக்குள் பிளவா? | Oneindia Tamil

2021 ஐபிஎல் தொடர் ஹைதராபாத் அணிக்கு மிக மோசமாக அமைந்துள்ளது. 5 போட்டிகள் ஆடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அந்த அணி வென்றுள்ளது.

அணியில் நல்ல வீரர்கள் இருந்தும், கேப்டன்சி சிறப்பாக இருந்தும் கூட அந்த அணியால் முக்கியமான போட்டிகளில் வெல்ல முடியவில்லை. இதற்கு அணி நிர்வாகத்திற்கும், கேப்டனுக்கும் இருக்கும் மோதல்தான் காரணம் என்றும் கூறுகிறார்கள்.

மோதல்

மோதல்

அதன்படி கேப்டன் வார்னரை கேட்காமல் ஹைதராபாத் அணிக்குள் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகிறது என்று தகவல்கள் வருகின்றன. அணி தேர்வு தொடங்கி வீரர்களின் பேட்டிங் வரிசை, 4 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வது என்று ஹைதராபாத் அணியில் எதுவும் வார்னர் கட்டுப்பாட்டில் இல்லை, அணிக்குள் எதுவுமே சரியில்லை என்று தகவல்கள் வருகின்றன.

 வார்னர்

வார்னர்

முக்கியமாக ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆர்டர் சரியில்லை. அணியில் முதலில் கேன் வில்லியம்சன் எடுக்கப்படவில்லை. அதன்பின் அணியில் மணீஷ் பாண்டே நீக்கப்பட்டார். இது இரண்டுமே டேவிட் வார்னரின் விருப்பம் இன்றி நடந்தது என்று கூறப்படுகிறது.

நீக்கம்

நீக்கம்

முக்கியமாக மணீஷ் பாண்டேயின் நீக்கத்தை வார்னர் விரும்பவில்லை என்கிறார்கள். இதை வார்னரே நேரடியாக குறிப்பிட்டார். மணீஷ் பாண்டேவை ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை. அவர் நல்ல பேட்ஸ்மேன். தேர்வாளர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார்.

சந்தேகம்

சந்தேகம்

இதனால் அணி தேர்வில் தனக்கு தொடர்பு இல்லை என்று வார்னர் மறைமுகமாக அறிவித்துள்ளார். தனக்கு அணி தேர்வில் முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதை வார்னர் அறிவித்துள்ளார். வார்னரின் இந்த பேச்சால் ஹைதராபாத் அணிக்குள் என்ன நடக்கிறது? அணிக்குள் ஏதாவது பிளவு ஏற்பட்டுள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

Story first published: Tuesday, April 27, 2021, 13:01 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+