For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது நம்ம லிஸ்டலயே இல்லையே.. ஆட்டத்தின் நடுவே பிராவோ செய்த விஷயம்.. திகைத்த வீரர்கள் - வீடியோ

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் நடுவே சென்னை வீரர் டுவைன் பிராவோ செய்த செயல் ரசிகர்களை பெரும் உற்சாகப்படுத்தியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆல்ரவுண்டர் பிராவோ விக்கெட் எடுத்தால் குஷியில் பயங்கரமாக கொண்டாடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்த முறை கொண்டாடிய விதம் அனைவருக்கும் சர்ஃபரைஸாக இருந்தது.

சிஎஸ்கே போட்டி

சிஎஸ்கே போட்டி

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹாரின் வேகத்தில் சிக்கி பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் (5), மயங்க் அகர்வால் (0), தீபக் ஹூடா (10), நிக்கோலஸ் பூரண் (0) என வெளியேறினர். அதிரடி பேட்ஸ்மேன் கெயில் 10 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இலக்கு

இலக்கு

பின்னர் வந்த வீரர்களில் ஷாருக்கான் மட்டுமே சிறப்பாக ஆடி 47 ரன்கள் அடித்ததால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. 107 என்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி ஆடி வருகிறது. இந்நிலையில் போட்டியின் நடுவே டுவைன் பிராவோ செய்த விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆச்சரியம்

ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஆட்டத்தின் 17வது ஓவரை வீச பேட்டிங் செய்துகொண்டிருந்த முருகன் அஸ்வின் அதனை மிட் ஆஃப் திசையில் அடிக்க முயன்றார். ஆனால் பந்து சுலபமாக டூப்ளசீஸ் கையில் சிக்கியது. இதனால் உற்சாகமடைந்த பிராவோ மைதானத்தில் விஜய்யின் 'வாத்தி கம்மிங்' நடனம் ஆடி கொண்டாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆட்டிப்படைக்கும் பாடல்

ஆட்டிப்படைக்கும் பாடல்

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி ஓர் ஆண்டை கடந்திருந்த போதும், பாடலின் மவுஸ் குறைந்ததாகத் தெரியவில்லை. தற்போது கிரிக்கெட் உலகையே இந்த பாடல் ஆக்கிரமித்துள்ளது எனக்கூறலாம். குறிப்பாக அஸ்வின், தினேஷ் கார்த்திக் முதல் ரஸ்ஸல் வரை அனைவரும் இந்தப் பாடலுக்குப் போடும் ஆட்டம் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த லிஸ்டில் பிராவோவும் தற்போது இணைந்துள்ளார்.

Story first published: Friday, April 16, 2021, 22:56 [IST]
Other articles published on Apr 16, 2021
English summary
Dwayne Bravo Comes Up With Vaathi Coming Celebration video Goes Viral
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+