Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொல்லார்டிடம் பெண் கேட்ட பிராவோ.. திடீர் சம்பவம்..பொல்லார்ட் கொடுத்த சூப்பர் ரிப்ளை.. ரசிகர்கள் குஷி

அமீரகம்: சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ தனது மகனுக்காக, கெயீரன் பொல்லார்டின் மகளை பெண் கேட்டது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிக முக்கிய ஆல்-ரவுண்டராக இருந்து வருபவர் டுவைன் பிராவோ. டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணிக்காக பல முறை விக்கெட்களை எடுத்துக் கொடுத்து உதவியுள்ளார்.

களத்தில் பேட்ஸ்மேன்களிடம் விளையாடுவது, நடனமாடுவது என தக் லைஃப் காட்டும் பிராவோ இன்ஸ்டாகிராமில் செய்துள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

அதாவது டுவைன் பிராவோ, தனது வெஸ்ட் இண்டீஸின் சக வீரரான கெயீரன் பொல்லார்டுடன் இன்ஸ்டாகிராமால் நடத்திய உரையாடல் தான் பெரிதாக பேசப்படுகிறது. டுவைன் பிராவோ தனது மகனின் பிறந்த நாளையொட்டி, அவருக்காக இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பதிவிட்டு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜூனியர் பிராவோ எனத் தெரிவித்திருந்தார். இந்த பதிவுக்கு மற்ற கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

பிராவோவின் பதில்

பிராவோவின் பதில்

அந்த வகையில் இவரது பதிவில் கமெண்ட் செய்த கெய்ரன் பொல்லார்ட், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜூனியர் பிராவோ எனத் தெரிவித்தார். உடனே பொல்லார்டின் வாழ்த்துக்கு ரிப்ளை செய்த பிராவோ, அவன் உங்கள் மாப்பிள்ளை என நக்கலாக தெரிவித்தார் பொதுவெளியில் தனது மகனுக்கு பிராவோ பெண் கேட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 பொல்லார்ட் கொடுத்த பதில்

பொல்லார்ட் கொடுத்த பதில்

இதனால் பிராவுக்கு பொல்லார்ட் என்ன பதில் தர போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் நீண்ட நேரம் பிராவோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காத்திருந்தனர். அதற்கேற்றார் போல அனைவரும் சிரிக்கும் வகையில் ஒரு பதிலை கொடுத்தார் பொல்லார்ட். அதாவது, கனவு காண்பதை நிறுத்துங்கள் பிராவோ, ஏன் இவ்வளவு தாமதமாக தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நகைச்சுவையாக பதிலடி கொடுத்தார். இதனை தக் லைஃப் எனக்கூறி ரசிகர்கள் சிரித்து வருகின்றனர்.

இருவரின் குடும்ப விவரம்

இருவரின் குடும்ப விவரம்

37 வயதாகும் டுவைன் பிராவோவுக்கு டுவைனைஸ் என்ற மகளும், டுவைன் பிராவோ ஜூனியர் என்ற மகனும் உள்ளனர். இதே போல கெயீரன் பொல்லார்ட் 34 வயதாகும் கெயீரன் பொல்லார்ட்-க்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பிராவோ - பொல்லார்ட் இருவரும் அடிக்கடி இதுபோன்ற நகைச்சுவை செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், இதுவும் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டது.

Story first published: Tuesday, October 5, 2021, 17:39 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+