Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அயல்நாட்டு வீரர்கள் பிரச்னை முடிவுக்கு வந்தது.. சிஎஸ்கே அப்டேட்

மும்பை: ஐபிஎல் தொடரில் அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் நிலவிவந்த நிலையில் மகிழ்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

Recommended Video

NCA's Strict Rules! Fitness Clearance Mandatory for players | OneIndia Tamil

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் மீதம் 31 போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்.14ம் தேதி முடிவடைகிறது. எனவே வீரர்களை அமீரகம் அழைத்து ஏற்பாடுகளை செய்ய நேரம் சரியாக இருக்கும் எனத்தெரிகிறது.

நீடிக்கும் சிக்கல்

நீடிக்கும் சிக்கல்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள், ஐபிஎல் தொடரில் பெரும் பங்காற்றி வருகின்றனர். டேவிட் வார்னர் ஐதராபாத் அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார். இயான் மோர்கன், கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர்கள் மட்டுமின்றி மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ் உள்ளிட்ட வீரர்களும் முக்கிய வீரர்களாக உள்ளனர்.

சென்னை அணி

சென்னை அணி

இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் தலைமை செயலாளர், காசி விஸ்வநாதன், ஐபிஎல் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது, அதில் இங்கிலாந்து வாரியம் தங்களது வீரர்களை அனுப்ப அனுமதி அளித்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்படி ஜேசன், பெகண்ட்ரூஃப், சாம் கரண், மொயீன் அலி ஆகியோர் ஐபிஎல்-ல் பங்கேற்காப்பார்கள் எனக்கூறியுள்ளார்.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

இதே போல பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி, சதிஷ் மேனன், ஒவ்வொரு வீரருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் விருப்பத்தின் பேரில் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் எனத்தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணியில் கிறிஸ் ஜோர்டன், டேவிட் மாலன் ஆகியோர் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.

நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து வீரர்கள்

ஏற்கனவே நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். கேன் வில்லியம்சன், ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதே போல மும்பை அணிக்கு ட்ரெண்ட் போல்ட்டும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கெயில் ஜேமிசன் ஆகியோர் முக்கிய வீரர்களாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 14, 2021, 22:06 [IST]
Other articles published on Aug 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+