Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய வீரர்கள் விலகல்.. சிக்கலில் சிக்கிய ராஜஸ்தான் அணி.. நியூசிலாந்து வீரருக்கு திடீர் அழைப்பு!

பெங்களூரு: ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் 2 பேர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால், பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடருக்காக சில அணிகள் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் சில அணிகளின் பங்கேற்பு குறித்த பேச்சுவார்த்தையே இன்னும் முடியாமல் உள்ளது.

நீடிக்கும் சிக்கல்

நீடிக்கும் சிக்கல்

ஐபிஎல் தொடர் அக்டோபர் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. அது முடிவடைந்த அடுத்த இரண்டு நாட்களில் , அதாவது அக்டோபர் 17ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் அதற்காக திட்டமிட்டு வருகின்றனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் வீரர்களுக்கு அனுமதி கொடுத்துள்ள போதும், வீரர்கள் இன்னும் குழப்பத்திலேயே தான் உள்ளனர்.

ஆர்சிபி அணியின் மாற்றம்

ஆர்சிபி அணியின் மாற்றம்

அந்தவகையில் நேற்று ஆர்சிபி அணியில் புதிதாக 3 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

நியூசிலாந்து வீரர்கள் ஃபின் ஆலன், ஸ்காட் குக்கெலிஜின் ஆகியோர் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேன் ரிச்சர்ட்ஸன், டேனியல் சாம்ஸ் மற்றும் ஆடம் சாம்பா என 5 அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை எனத்தெரிவித்துவிட்டனர். இதனால் அந்த அணி இலங்கை அணி வீரர்கள், வானிண்டு ஹசரங்கா துஷ்மந்தா சமீரா ஆகியோரும், சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

ஜோஸ் பட்லர் விலகல்

ஜோஸ் பட்லர் விலகல்

இந்நிலையில் ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தனது வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார். ஜாஸ் பட்லர் மற்றும் அவரது மனைவி லூயிஸ் விரைவில் 2வது குழந்தையை பெறவுள்ளதால் ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

நட்சத்திர பவுலர்

நட்சத்திர பவுலர்

இதே போல அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது ஓய்வு பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓய்வு தேவை என்பதால் கலந்துக்கொள்ளவில்லை. இதனிடையே அவர்களுக்கு மாற்றாக முதற்கட்டமாக நியூசிலாந்து வீரர் ஒருவரை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

புதிய வீரர்

புதிய வீரர்

நியூசிலாந்து அணியை சேர்ந்த க்ளென் பிலிப்ஸ் இதுவரை 25 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 506 ரன்களை குவித்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 149.70 ஆகும். இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால், பட்லரின் இடத்திற்கு நிரப்பியுள்ளனர். ஆர்சருக்கு மாற்றாக விரைவில் ஒரு வீரரை அந்த அணி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, August 22, 2021, 16:23 [IST]
Other articles published on Aug 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+