ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் ஐபிஎல் தொடர்? பிராகசமாக உள்ள சாத்தியக்கூறுகள்.. பிசிசிஐ முடிவு என்ன?
மும்பை: தடைபட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என 3 நாடுகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏப்.9ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29ம் லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 ஆட்டங்கள் உள்ளன.

ஐபிஎல்
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு ரூ.2,200 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது. எனவே மீதமுள்ள போட்டிகளை இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நடத்தப்படும் என தகவல் வெளியாகி வருகிறது. அதாவது செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்படுகிறது. ஆனால் இந்தியா தற்போது உள்ள் சூழலில் உலகக்கோப்பை தொடரே இங்கு நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

முதல் தேர்வு
இந்நிலையில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது முதல் தேர்வாக உள்ளது. அங்கு கடந்தாண்டே வெற்றிகரமாக போட்டிகள் நடத்தப்பட்டன. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி செப்.14வரை அங்கு விளையாடுகிறது. அதன் பின்னர்தான் ஐபிஎல் போட்டிகளில் ஆடும்.

வெயில்
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதத்தில் கடும் வெயில் நிலவும். அங்கு அக்டோபர் மாதங்களில் தான் சற்று வெயில் குறையும் என கூறப்படுகிறது. ஆனால் அக்டோபரில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. இதனால் அமீரகம் சரியான தேர்வாக இருக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது.

2வது தேர்வு
ஐபிஎல்-க்கான 2வது தேர்வாக இங்கிலாந்து இருக்கும். ஏனென்றால் செப்டம்பர் மாதம் வரை இந்திய அணி இங்கிலாந்தில் தான் இருக்கும். எனவே அதனைதொடர்ந்து உடனடியாக ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம். தொலைக்காட்சி நிறுவனம் இந்தியாவில் ஒளிபரபரப்பு செய்ய நேரங்களும் பொருந்தி இருக்கும்.

3வது தேர்வு
இதனையடுத்து 3வது தேர்வாக ஆஸ்திரேலியா உள்ளது. இந்தியாவில் டி20 உலகக்கோப்பை ஒருவேளை நடத்தவில்லை என்றால் அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல நேரிடலாம். 2022ம் ஆண்டுகான தொடரை இந்தியா நடத்தலாம். எனவே அப்படி உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றால் அதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகளை அங்கு நடத்திவிடலாம்.

டி20 உலக்கோப்பை
உலகக்கோப்பைக்கு தயாராகும் அயல்நாட்டு வீரர்கள் சில நாட்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிடலாம். அதே போல பெர்த் மைதானம் இந்திய நேரத்தில் மூன்றரை மணி நேரம் மட்டுமே மாறுபட்டிருக்கும். எனவே தொலைகாட்சி ஒளிபரப்புக்கும் பிரச்னை இருக்காது.

பிசிசிஐ முடிவு
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால், இந்த 3 நாடுகளில் எங்கு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்பதை பிசிசிஐ தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, அது குறித்து தற்போது கூற முடியாது, அதற்கு இன்னும் நாட்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications