Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நிமிடம் கண்களை கசக்கி பார்த்த ரோஹித்.. சென்னை "மண்ணை" வைத்து பூச்சாண்டி காட்டிய இயான்.. பரபரப்பு

சென்னை: மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கன் இன்று எடுத்த முடிவு பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

மும்பைக்கும் கொல்கத்தாவிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது.

மும்பை அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருந்தாலும் தற்போது நிதானமாகவே அந்த அணி பேட்டிங் செய்து வருகிறது. பெரிய அளவில் இதுவரை அதிரடி காட்டவில்லை.

விக்கெட்

விக்கெட்

இந்த போட்டியில் மேட்ச் தொடங்கியதும் டி காக் தனது விக்கெட்டை இழந்துவிட்டார். டி காக் மீது இன்று அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஓவரில் டி காக் அவுட் ஆனார்.

டி காக்

டி காக்

இன்று போட்டியில் முதல் 5 ஓவர்களை ஸ்பின் பவுலர்கள் மட்டுமே வீசினார்கள். முதல் ஓவரை ஹர்பஜன் வீசினார். அதற்கு அடுத்த ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார். பின் மீண்டும் ஹர்பஜன் வீசினார். பின் ஷாகிப் அல் ஹசனுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது.

வருண் பவுலிங்

வருண் பவுலிங்

பின் மீண்டும் வருண் பவுலிங் செய்தார். முதல் 5 ஓவர் மொத்தத்தையும் ஸ்பின் பவுலர்கள் மட்டுமே வீசினார்கள். எந்த கேப்டனும் இதற்கு முன் ஐபிஎல்லில் இப்படி செய்தது இல்லை. ஆனால் இயான் மோர்கன் துணிச்சலாக ஸ்பின் பவுலர்களை மட்டுமே களமிறங்கினார்.

சென்னை பிட்ச்

சென்னை பிட்ச்

சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங் பிட்ச் ஆகும். இங்கு தொடக்கத்தில் ஸ்பின் பவுலர்கள் நன்றாக போட முடியும். போக போக ஸ்பின் செய்வது கஷ்டம். சேப்பாக்கம் மண் தற்போது கொஞ்சம் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டு இயான் மோர்கன் தொடர்ந்து ஸ்பின் பவுலர்களை களமிறங்கினார்.

கடைசி கட்டம்

கடைசி கட்டம்

கடைசி கட்டத்தில் ஸ்பின் பவுலர்கள் சொதப்ப வாய்ப்புள்ளது என்பதால் இயான் மோர்கன் இப்படி செய்தார். பவர் பிளே முடிந்த பின்பும் கூட ஸ்பின் பவுலர்களை மோர்கன் தொடர்ந்து பயன்படுத்தினார். இயான் மோர்கனின் இந்த மூவை ரோஹித் சர்மா கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.

Story first published: Tuesday, April 13, 2021, 20:19 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+