Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போன வருஷமும் இப்படித்தான் பண்ணாரு.. தோனி செய்தது தவறு.. செம டென்ஷனில் ரசிகர்கள்.. பரபர பின்னணி

சென்னை: 2020 ஐபிஎல் தொடரில் செய்ததை போலவே கேப்டன் தோனி இந்த முறையும் சிஎஸ்கே அணியில் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரின் போது இளம் வீரர்களுக்கு தோனி முறையான வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற புகார் எழுந்தது. ரூத்துராஜ், ஜெகதீசன் போன்றவர்களை தோனி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.

இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறியதும் கூட பெரிய அளவில் சர்ச்சையானது. இளம் வீரர்களை தோனி புறக்கணிப்பதாக சிஎஸ்கே ரசிகர்களே புகார் வைத்தனர்.

ரூத்துராஜ்

ரூத்துராஜ்

முக்கியமாக ரூத்துராஜ், ஜெகதீசன் போன்ற வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். ஆனால் இவர்களுக்கு கடைசி கட்டத்தில்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதும் தோனி இளம் வீரர் ஒருவரை புறக்கணித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக வலைப்பயிற்சியில் பவுலின் செய்த ஆப்கானிஸ்தான் வீரர் பசல்ஹாக் பரூக் என்ற வீரரை தோனி புறக்கணித்துள்ளார்.

பசல்ஹாக் பரூக்

பசல்ஹாக் பரூக்

வலைப்பயிற்சியில் நன்றாக பவுலிங் செய்து வந்தார் பசல்ஹாக் பரூக். சிஎஸ்கேவில் இருந்து வெளியேறிய ஹஸல்வுட்டுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி பசல்ஹாக் பரூக்கை அணியில் எடுக்காமல், அவர் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி போக சொல்லி உள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

இதனால் சிஎஸ்கே வலைப்பயிற்சி டீமில் இருந்து பசல்ஹாக் பரூக் வெளியேறி உள்ளார். தோனியின் இந்த முடிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. தோனி இப்படி செய்தது தவறு. ஒரு கேப்டனாக அவர் இப்படி செயல்பட கூடாது.மூத்த வீரர்கள் பலர் ஹஸல்வுட்டுக்கு மாற்றாக வர விரும்பவில்லை. அப்படி இருக்கும் போது பசல்ஹாக் பரூக்கிற்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

வாய்ப்பு

வாய்ப்பு

வாய்ப்பிற்காக ஏங்கும் பசல்ஹாக் பரூக் போன்ற வீரர்களை அணியில் எடுக்கலாம். அதை விட்டுவிட்டு அவரை வெளியே அனுப்பியதில் நியாயமே இல்லை. கடந்த வருடமும் இளம் வீரர்களை இதேபோல்தான் தோனி புறக்கணித்தார்.

மோசம்

மோசம்

அப்போது மூத்த வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை. பசல்ஹாக் பரூக்கிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருந்தால் அவர் தன்னை நிரூபித்து இருப்பார். இந்த வருடமும் அதே தவறை தோனி செய்ய கூடாது என்று சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

Story first published: Friday, April 9, 2021, 11:15 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+