“அப்ப அது இல்லையா?” சிஎஸ்கே - டெல்லி போட்டியில் உள்ள பிரச்னை.. ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்!
துபாய்: சிஎஸ்கே - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் முக்கிய விஷயம் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
14வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மற்றொரு புறம் யார் சிறந்தவர் என்ற போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தாண்டு தொடரில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் தலா 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. ஆர்சிபி அணியும் முன்னேறிவிட்டது.
முக்கிய போட்டி

முக்கிய ஆட்டம்
இந்நிலையில் இன்று புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் இடத்தினை உறுதி செய்யும் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே இன்றைய போட்டியில் பழித்தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. அனல் பறந்த அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. எனவே 2வது போட்டியில் திருப்பிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

களத்தில் பிரச்னை
இரண்டு அணிகளுமே நல்ல ஃபேட்டிங் மற்றும் பவுலிங் படையை வைத்திருப்பதால் இன்றைய போட்டியிலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆப்பு வைத்துள்ளது பிசிசிஐ. போட்டி நடைபெறும் துபாய் மைதானம் ரன்கள் அடிப்பதற்கே சிரமமான மைதானமாக உள்ளது. அதாவது துபாய் மைதானத்தில் விக்கெட்டுகள் மிக மெதுவாக இருக்கும் என்பதால் பந்தை எதிர்கொள்வதற்கு பேட்ஸ்மேன்கள் கடுமையாக சிரமப்படுவார்கள். பந்துவீச்சாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். இதனால் 120 - 130 ரன்களே சராசரியாக அங்கு வந்துக் கொண்டிருக்கின்றன.

ஏமாற்றம்
நேற்று இரவு நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது. முழுக்க முழுக்க பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால், டாஸ் வென்று முதலில் பந்துவீசும் அணியால் ரன்களை கட்டுப்படுத்த முடியும். அடுத்து, இரண்டாவது சுலபமாக சேஸ் செய்ய முடியும். இதன் காரணமாக இன்று டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போ சிக்ஸர் மழைகளை பார்க்க முடியாதா என ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications