Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க வீட்டுக்கு போகலாம்.. நன்றாக ஆடிய இளம் வீரரை சொந்த ஊருக்கு அனுப்பிய தோனி.. சிஎஸ்கே ஷாக்!

சென்னை: சிஎஸ்கே அணியில் சிறப்பாக ஆடி வந்த இளம் பவுலர் ஒருவரை அணி நிர்வாகம் மீண்டும் திருப்பி அனுப்பி உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த ஒரு மாதமாக இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் பாதி நாட்கள் பயிற்சி செய்த வீரர்கள், மீதம் உள்ள நாட்கள் மும்பையில் பயிற்சி செய்தனர். நாளை சென்னைக்கும், டெல்லிக்கும் போட்டி நடக்க உள்ளது.

எப்படி

எப்படி

சென்னை அணி இப்படி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோஸ் ஹஸல்வுட் வெளியேறி உள்ளார். சிஎஸ்கே வீரரான இவர் இந்த சீசனில் இருந்து வெளியேறி உள்ளார். குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும், ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஹஸல்வுட் கூறியுள்ளார்.

போச்சு

போச்சு

இவருக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று சென்னை அணி தீவிரமாக முயன்றது. ஆஸ்திரேலியாவின் பில்லி ஸ்டான்லேக், இங்கிலாந்தின் ரேஸ் டோப்லி ஆகியோருக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இவர்கள் சென்னை அணியின் அழைப்பை ஏற்கவில்லை.

யார் இவர்?

யார் இவர்?

இந்த நிலையில்தான் சென்னை அணிக்கு வலைப்பயிற்சியின் போது பவுலிங் செய்த ஆப்கானிஸ்தானின் இளம் வீரர் பசல்ஹாக் பரூக் கவனம் ஈர்த்தார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த இவருக்கு 20 வயதுதான் ஆகிறது. சென்னை அணிக்கு வலைப்பயிற்சியில் இவர் சிறப்பாக பவுலிங் செய்தார்.

பவுலிங்

பவுலிங்

தோனி, ரெய்னா, ராயுடு என்று பலரின் விக்கெட்டை வலைப்பயிற்சியில் பசல்ஹாக் பரூக் எடுத்தார். இதனால் ஹஸல்வுட்டுக்கு மாற்றாக இவர் எடுக்கப்படுவார் என்று கூறப்பட்டது. பசல்ஹாக் பரூக் சிஎஸ்கே அணியில் இணைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் இவரை தற்போது ஆப்கானிஸ்தானுக்கு சென்னை அணி திருப்பி அனுப்பி உள்ளது.

ஏன்

ஏன்

வலைப்பயிற்சியில் இனியும் இவர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறி, இவரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி உள்ளனர். இத்தனை நாட்கள் இவர் நன்றாக பவுலிங் செய்து வந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் அனுப்பி உள்ளனர். இவர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை எடுத்தார்.

அறிமுகம்

அறிமுகம்

இதனால் சென்னை அணியில் இவர் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் என்று இவர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Friday, April 9, 2021, 15:35 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+