
பயிற்சி ஆட்டம்
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் வீரர் பசல்ஹாக் ஃபருக்கி மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். சிஎஸ்கே அணியில் இவர் நெட் பயிற்சி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த இவர் பெரிய அளவில் சர்வதேச போட்டிகளில் ஆடியது இல்லை.

சர்வதேச போட்டிகள்
ஆனால் ஆப்கானிஸ்தானின் முதல் தரப்போட்டிகளிலும், பல லீக் போட்டிகளிலும் பசல்ஹாக் சிறப்பாக ஆடி இருக்கிறார். இவரின் சிறப்பான பவுலிங் காரணமாக ஈர்க்கப்பட்ட தோனி, தற்போது வலைப்பயிற்சியில் பவுலிங் செய்ய வேண்டும் என்று இவரை அணியில் எடுத்துள்ளார். வலைப்பயிற்சியில் பசல்ஹாக் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறாராம்.

எப்படி
இதுவரை நடந்த பயிற்சி ஆட்டங்களில் பசல்ஹாக் பலமுறை ரெய்னா, தோனியின் விக்கெட்டை எடுத்துள்ளார். வைட் யார்க்கார், ஸ்லோ பவுன்சர் மூலம் இரண்டு பேரையும் பசல்ஹாக் திக்குமுக்காட செய்துள்ளார். ஷார்ட் பந்து போட்டால் லெக் சைடில் ஆட முடியாமல் ரெய்னா திணறுவார். இதனால் அவருக்கு அதேபோன்ற பந்துகளை பசல்ஹாக் வீசியுள்ளார்.

பசல்ஹாக்
ரெய்னா, தோனி விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்து பசல்ஹாக் அசத்தி உள்ளார். இவரின் பவுலிங்கை பார்த்து சென்னை அணி நிர்வாகம் பெரிய அளவில் இம்ப்ரஸ் ஆகியுள்ளது. இவருக்கு விரைவில் அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

ஹஸல்வுட்
சென்னை அணியில் இருந்து ஹஸல்வுட் வெளியேறிவிட்டார். இவருக்கு பதிலாக மாற்று வெளிநாட்டு வீரரை சென்னை அணி தேர்வு செய்ய வேண்டும். இந்த இடத்தை பசல்ஹாக்கை சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications