Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதிர்ஷ்டம் இல்லாத தோனி”.. டாஸில் மோர்கன் சொன்ன சூசகம்.. சிஎஸ்கே அணியின் வெற்றி கேள்விக்குறி?

அமீரகம்: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்துள்ளது.

14வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

 ஏமாற்றிய தோனி

ஏமாற்றிய தோனி

இந்த இறுதிப்போட்டியை பொறுத்தவரை டாஸ் வெல்வது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் துபாய் மைதானம் மிகப்பெரிய பவுண்டரிகளை கொண்டது ஆகும். முதலில் பேட்டிங் செய்யும் அணியை குறைந்த ஸ்கோருக்குள் சுருட்டிவிட்டு, இரண்டாவதாக பேட்டிங் செய்வதற்கு இங்கு சாதகமான சூழல் இருக்கும். இதனால் இங்கு இதுவரை நடைபெறுள்ள போட்டிகளில் 80% வெற்றிகள் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே கிடைத்துள்ளது.

மோர்கனின் குறிப்பு

மோர்கனின் குறிப்பு

இதுமட்டுமல்லாமல் துபாய் மைதானத்தில் தற்போது பனி சற்று கொட்டி வருவதாக கொல்கத்தா அணி கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். பனி இருக்கும் போது, பேட்டிற்கு பந்து வருவதில் சிறிது கடினமாக இருக்கும். இது நிச்சயம் சிஎஸ்கே அணியை அதிரடியாக விளையாடவிடாமல் தடுக்கும். இன்றைய போட்டியில் சராசரியாக 160+ ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

இன்றைய போட்டியிலாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அழுத்தம் மிகுந்த போட்டிகளில் சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடக்கூடியவர். ஆனால் இந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. வெற்றிக்கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதால் தோனி தனது ஆஸ்தான வீரரையே களமிறக்கவில்லை.

கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி

இதே போல கொல்கத்தா அணியிலும் எதிர்பார்ப்பு உடைந்துள்ளது. அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கூடுதல் பலம் தேவைப்பட்டது. எனவே அதற்காக ஆண்ட்ரே ரஸல் கொண்டு வரப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் அவர் வாய்ப்பு பெறவில்லை. அவரின் இடத்தில் தொடர்ந்து சகிப் அல் ஹசனே விளையாடுகிறார்.

Story first published: Friday, October 15, 2021, 19:35 [IST]
Other articles published on Oct 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+