Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அயல்நாட்டு வீரர்கள் இல்லாத ஐபிஎல்? பிசிசிஐ-க்கு இருக்கும் பெரும் தலைவலி..இன்று வெளியாகிறது அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் தொடர் செப்டம்பரில் மீண்டும் நடத்தப்பட்டால் அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்பு குறித்த கேள்வி பிசிசிஐக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 18 அல்லது 19ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் செப்.14ம் தேதி முடிவடைந்த உடனேயே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்-ஐ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிசிசிஐ கூட்டம்

பிசிசிஐ கூட்டம்

பிசிசிஐ சார்பில் இன்று 'SGM' எனப்படும் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. மும்பையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடைபெறுகிறது. ஒருவேளை செப்டம்பர் 3வது வாரம் முதல் அக்டோபர் வரை ஐபிஎல் நடத்தப்பட்டால் அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் உள்ளது. ஏனென்றால் அந்த மாதங்களில் டி20 உலகக்கோப்பைக்கு பயிற்சி மேற்கொள்ளும் நோக்கி சர்வதேச தொடர்களில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இங்கிலாந்து திட்டவட்டம்

இங்கிலாந்து திட்டவட்டம்

இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு வங்கேதசம் மற்றும் பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் மட்டும் டி20 போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் தாய் நாட்டிற்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அந்த அணியின் முக்கிய வீரர்கள் அதில் பிசியாக இருப்பார்கள் என்பதால் ஐபிஎல்-ல் பங்கேற்பதில் சந்தேகமே. அதே போல தென்னாப்பிரிக்க அணியும் நெதர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் மோத திட்டமிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அடுத்ததாக இலங்கை அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் உள்ளதால் அவர்களின் பங்கேற்பதில் சிக்கல் உள்ளது. இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, கெரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் நடைபெறவுள்ளது. வெஸ்ட் இண்டீஸின் இந்த் தொடர் ஆக.28 முதல் செப்.19 வரை நடைபெறுகிறது. ஒருவேளை இதனை முடித்த கையுடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், ஐபிஎல்-ல் பங்கேற்க வந்தாலும், முதல் சில நாட்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டியுள்ளது.

Story first published: Saturday, May 29, 2021, 11:20 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+