Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரு மூச்சு விடும் விராட் கோலி.. அந்த ஒரு விஷயத்தாலதான் எல்லாமே.. முன்னால் வீரர் பாராட்டு!

சென்னை: ஆர்சிபி அணிக்கு இறுதியாக கிடைத்திருக்கும் ஒரு நல்ல பவுலிங் படையால் விராட் கோலி நிம்மதியாக இருப்பார் என முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் வீழ்த்த முடியாத அசுர பலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது.

இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 பவுலிங்

பவுலிங்

கடந்த ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பேட்டிங் சிறப்பாக இருந்த போதிலும், பந்துவீச்சாளர்களின் சொதப்பலால் அந்த அணி தோல்வியடைந்துவிடும். பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வந்தனர். ஆனால் இந்தாண்டு அந்த அணியின் பவுலிங் படை சிறப்பாக அமைந்துள்ளது.

ஹர்ஷல்

ஹர்ஷல்

இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் இளம் வீரர் ஹர்ஷல் பட்டேல் 12 விக்கெட்டுகள் எடுத்து இந்த சீசனில் அதிக விக்கெட் எடுத்த வீரராக உள்ளார். அதே போல கெயில் ஜேமிசன் 6, முகமது சிராஜ் 5 விக்கெட்களை எடுத்துள்ளனர். இவர்களின் சிறப்பான பந்துவீச்சால் ஐதராபாத் அணிக்கு எதிராக 149 ரன்களை கூட கட்டுப்படுத்த முடிந்தது.

கெவின் பீட்டர்சன்

கெவின் பீட்டர்சன்

இதுகுறித்து பேசியுள்ள கெவின் பீட்டர்சன், விராட் கோலி நீண்ட நாட்களாக சரியான பவுலிங் காம்பினேஷனை தேடி வந்தார். பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்துவது போன்று பவுலிங்கிலும் இருக்க வேண்டும் என நினைத்தார். அது தற்போது அமைந்துள்ளது. அவர்களுக்கு பல பவுலர்கள் கிடைத்தனர் எனினும், கெயில் ஜேமிசன் - சிராஜ் ஜோடி சிறப்பானதாக அமைந்துள்ளது.

விராட் கோலி நிம்மதி

விராட் கோலி நிம்மதி

இதனால் பவுலிங் யூனிட்டை பொறத்தவரை தற்போது சிறப்பாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், ஏதேனும் வீரருக்கு ஓய்வு தேவைப்பட்டால் அவர்களுக்கு பதிலாக ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்துள்ளனர். எனவே கேப்டன் விராட் கோலி தற்போது நிம்மதியாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, April 24, 2021, 20:43 [IST]
Other articles published on Apr 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+