Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்கள் பங்கேற்புடன் ஐபிஎல் தொடர்... புதிய ஐடியா கொடுத்துள்ள பீட்டர்சன்.. முடிவெடுக்குமா பிசிசிஐ!

மும்பை: ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் ரசிகர்கள் பங்கேற்புடன் நடத்த கெவின் பீட்டர்சன் புதிய ஐடியா கொடுத்துள்ளார்

14வது ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் தடைபட்டுள்ளன.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு ரூ.2,200 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது. எனவே மீதமுள்ள போட்டிகளை இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நடத்தப்படும் என தகவல் வெளியாகி வருகிறது. அதாவது செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்படுகிறது. ஆனால் இந்தியா தற்போது உள்ள் சூழலில் உலகக்கோப்பை தொடரே இங்கு நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

முதல் தேர்வு

முதல் தேர்வு

ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது முதல் தேர்வாக உள்ளது. அங்கு கடந்தாண்டே வெற்றிகரமாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் அங்கு செப்டம்பர் மாதத்தில் கடும் வெயில் நிலவும். அங்கு அக்டோபர் மாதங்களில் தான் சற்று வெயில் குறையும் என கூறப்படுகிறது. அக்டோபரில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. இதனால் அமீரகம் சரியான தேர்வாக இருக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது.

ஐடியா

ஐடியா

இந்நிலையில் கெவின் பீட்டர்சன் புது ஐடியா கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பேச்சுக்கள் உள்ளன. அனால் என்னை பொறுத்தவரை மீதமுள்ள போட்டிகள் இங்கிலாந்தில் நடத்துவதே சரியாக இருக்கும்.

வாய்ப்பு

வாய்ப்பு

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி செப்.14வரை அங்கு விளையாடுகிறது. எனவே செப்டம்பர் மாத இடையில் இருந்து அக்டோபர் இடையில் வரை இங்கிலாந்தில் மைதானங்கள் ரெடியாக இருக்கும். அங்கு இந்திய வீரர்களும் இருக்கின்றனர், அதே போல இங்கிலாந்தின் சிறந்த வீரர்களும் இருக்கின்றனர்.

ரசிகர்கள் பங்கேற்பு

ரசிகர்கள் பங்கேற்பு

செப் - அக்டோபர் மாதங்களுக்கு இடையே இங்கிலாந்தின் கால நிலை மிகச் சிறப்பாக இருக்கும். ஐபிஎல் தொடருக்காக மான்செஸ்டர், லீட்ஸ், பிர்மிங்கம், லண்டனில் உள்ள 2 மைதானங்களை பிசிசிஐ பயன்படுத்திக்கொள்ளலாம். அங்கு ரசிகர்களின் பங்கேற்புடனும் நடத்த பெரிய அளவில் வாய்ப்புகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, May 8, 2021, 20:02 [IST]
Other articles published on May 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+