Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுனால தான் அவர் MR.360.. டிவில்லியர்ஸுக்கு சரியான உதாரணம் காட்டிய சேவாக்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதுனால தான் அவர் MR.360.. டிவில்லியர்ஸுக்கு சரியான உதாரணம் காட்டிய சேவாக்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை: டிவில்லியர்ஸ் MR.360 என அழைக்கப்படுவது குறித்து முன்னாள் வீரர் சேவாக் சுவாரஸ்ய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் தொடக்கும் முதலே சிறப்பாக ஆடி வந்த ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலிலும் டாப் இடத்தில் உள்ளது.

இதில் வயசானாலும் ஸ்டைல் இன்னும் மாறவில்லை என்பது போல இந்த ஐபிஎல் தொடரில் ஏபிடிவில்லியர்ஸ் அதிரடி காட்டினார்.

ஓய்வே இல்லை

ஓய்வே இல்லை

தென்னாப்பிரிக்க வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று சுமார் 3 ஆண்டுகள் அகிறது. ஆனால் இன்னமும் அவரின் வேகமும், அதிரடியும் குறைந்தபாடு இல்லை. கொரோனா காரணமாக அவர் கிட்டத்தட்ட 5 மாதங்களாக கிரிக்கெட் ஆடாமல் இருந்தார். எனினும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய அதிரடி யார் கண்ணில் இருந்தும் மறையவில்லை.

தொடர்ந்து அதிரடி

தொடர்ந்து அதிரடி

இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி அவர் 3 அரை சதங்களை விளாசினார். குறிப்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபில் அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து சரிந்த நிலையில் டிவில்லியர்ஸ் தனி ஆளாக போராடி 42 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதனால் 171 ரன்கள் குவித்த ஆர்சிபி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்

ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சேவாக், டிவில்லியர்ஸ் எனும் பெயரை மக்கள் சுலபமாக மறந்துவிடலாம். ஆனால் MR.360 என்ற பெயரை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். இதனால் அவருக்கு வேறு பெயர் நாம் சூட்ட தேவையில்லை. இதுவே சிறப்பான பெயராகும்.

உதாரணம்

உதாரணம்

டெல்லிக்கு எதிரான போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய ஓவரில் அவுட்சைட் ஆஃப் ஆக முதல் சில பந்துகளை அடிக்காமல் விட்டார். ஸ்டோய்னிஸ் ஓவரை நன்கு சுதாரித்துக்கொண்ட டிவில்லியர்ஸ், அடுத்த பந்தும் அதே போன்று தான் வரும் என ஆஃப்சைட்-க்கு நகர்ந்து சென்றார். ஆனால் எதிர்பார்த்த பந்து வரவில்லை. மாறாக ஷார்ட் பிச் பால் போடப்பட்டது. ஆனால் சற்றும் பதற்றபடாத டிவில்லியர்ஸ் சிக்ஸருக்கு விரட்டி அசத்தினார்.

 தேட தேவையில்லை

தேட தேவையில்லை

இதுபோன்ற ஷாட்களை ஆட டிவில்லியர்ஸால் தான் முடியும். இதுவே அந்த இடத்தில் வேறு வீரர் இருந்திருந்தால் ஷார்ட் பாலில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி இருப்பார். இதன் காரணமாகவே டிவில்லியர்ஸுக்கு புது பெயர் வைக்க எதிலும் தேட வேண்டியதில்லை. Mr. 360 என்பதே சரியான பெயர் எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, May 9, 2021, 16:34 [IST]
Other articles published on May 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+