Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராவோ மீது கொந்தளிக்கும் முன்னாள் வீரர்கள்.. போட்டியின் போது செய்த தவறு.. சிக்கிய ஆதாரம்.. பின்னணி

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் பிராவோ செய்த தவறுக்கு முன்னாள் வீரர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சுழற்பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என கலக்கியதால் நேற்றைய போட்டியில் பழைய சிஎஸ்கே அணியை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி ஆகியோரின் சுழலில் சிக்கி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிராவோவின் தவறு

பிராவோவின் தவறு

இந்நிலையில் போட்டியின் நடுவே பிராவோ செய்த செயல் சர்ச்சையாகியுள்ளது. ஆட்டத்தின் 20வது ஓவரை முஸ்தபிஸுர் ரஹ்மான் வீச ஷர்துல் தாக்கூர் பேட்டிங் செய்ய மறுமுனையில் பிராவோ நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த ஓவரின் 2வது பந்தில் முஸ்தபிஸுர் ரஹ்மான் கோட்டை தாண்டி காலை வெளியில் வைத்து போட்டதால் நோ பால் சிக்னல் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பந்து வீசப்படுவதற்கு முன்னதாகவே பிராவோ நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்-ல் இருந்து சில தூரம் முன்னே சென்று விட்டார். இது பெரும் பேசுப்பொருளாகியுள்ளது.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரஷாத், பவுலர் சில தூரம் முன்னால் காலை வைத்து பந்தை வீசினால் அது நோ -பால், ஆனால் பேட்ஸ்மேன் சில தூரம் முன்னே சென்றால் தவறு இல்லையா? பந்துவீச்சாளருக்கு அவரை அவுட் செய்வதற்கான எல்லா உரிமையும் உள்ளது எனக்காட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜாஸ் பட்லர் இது போன்ற செயலில் ஈடுபட்ட போது அஸ்வின் அவரை ரன் அவுட்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

ரன் அவுட்

ரன் அவுட்

இதே போல நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டோல், பிராவோ பந்துவீசுவதற்கு முன்னதாகவே கிரீஸில் இருந்து வெளியேறிவிட்டார். இதற்கு எதுவும் சொல்லவில்லை. ஆனால் பந்துவீச்சாளர் சிறிது தூரம் தான் காலை கிரீஸுக்கு வெளியே வைத்து போட்டார். ஆனால் அந்த பந்துக்கு நோ - பால் சிக்னலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அவரை கண்டிப்பாக ரன் அவுட்டாக்கிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்னதாக பேட்ஸ்மேன் களத்தில் இருந்து வெளியேறினால் ரன் அவுட்டாக்கலாம் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 20, 2021, 18:52 [IST]
Other articles published on Apr 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+