Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘வெற்றிக்கு பின்னால் கோல்மால்’ கேமராவில் சிக்கிய சீக்ரெட்.. KKR கேப்டனை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

அமீரகம்: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பின்னால் கோல்மால் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாள் தோறும் புள்ளிப்பட்டியல்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த இரண்டாவது பகுதி ஆட்டங்களில் சிஎஸ்கே, டெல்லி ஆகிய அணிகளை தாண்டி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது கொல்கத்தா அணியின் ஆட்டம் தான்.

குவியும் வெற்றிகள்

குவியும் வெற்றிகள்

ஐபிஎல் தொடரில் முதல் பாதி ஆட்டங்களில் மிக மோசமாக சொதப்பி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2வது பகுதியில் அனைத்து அணிகளுக்கும் சவால் கொடுத்து வருகின்றன. அந்த ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை எளிதாக வீழ்த்திய கொல்கத்தா அணி, சிஎஸ்கே அணியை தோல்வியின் விளிம்பிற்கே கொண்டு சென்றுவிட்டது. இந்த திடீர் மாற்றம் குறித்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

வெற்றிக்கு பின்னால் கோல்மால்

இந்நிலையில் இவை அனைத்திற்கும் பின்னால் சிறிய கோல்மால் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது போட்டியின் ஒவ்வொரு பந்துக்கும் இடையே டக் அவுட் பகுதியில் இருந்து கேப்டன் இயான் மோர்கனுக்கு ரகசிய சிக்னல் கொடுக்கப்பட்டு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.

ரகசிய சிக்னல்

ரகசிய சிக்னல்

மும்பை இந்தியன்ஸ் அணியை 155 ரன்களுக்கு சுருட்டிய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இந்த போட்டியின் போது கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் களத்தில் இருந்து பேட்டிக் கொடுத்து வந்தார். அப்போது ஒவ்வொரு பந்துக்கும் இடையே, களத்திற்கு வெளியில் இருந்த பவுலிங் வல்லுநர் நாதன் லீமான் ஒவ்வொரு 'எண்கள்' மூலம் இயான் மோர்கனுக்கு ரகசிய சிக்னல் கொடுக்கிறார். அதற்கேற்றார் போல பவுலர்களுக்கு மோர்கன் ஆலோசனைக் கூறி விக்கெட் எடுக்கிறார்கள்.

ரசிகர்கள் விளாசல்

ரசிகர்கள் விளாசல்

அணி வீரர்களை வழிநடத்தவும் திட்டங்களை செயல்படுத்தவும் கேப்டன் என்ற பெயரில் இயான் மோர்கன் உள்ள சூழலில் வெளியில் இருந்து திட்டங்களை பெறுவதா என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். இந்த செயல் குறித்து பேசியுள்ள கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர், இந்த செயலில் ஈடுபடுவதற்கு பதிலாக கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிடலாம் எனக் கடுமையாக சாடியுள்ளார்.

Story first published: Tuesday, September 28, 2021, 16:06 [IST]
Other articles published on Sep 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+