Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாயடைத்த பாண்டியா. மெய்சிலிர்க்க வைத்த பேச்சு.. இதுதான் பொல்லார்ட் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை

டெல்லி: சிஎஸ்கேவுக்கு எதிராக மிரட்டிய பொல்லார்ட் குறித்து ஹர்த்திக் பாண்டியா கூறியுள்ள வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

சிஎஸ்கே 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தபோதும் மும்பை அணியில் பொல்லார்ட் ஒற்றை ஆளாக போராடி வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

பொல்லார்ட்

பொல்லார்ட்

மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 35 ரன்களுக்கும் , டிகாக் 38 ரன்களும் எடுத்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவும் 3 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் களமிறங்கிய கெயிரன் பொல்லார்ட் தொடக்கம் முதலே சிஎஸ்கே பந்துவீச்சை துவம்சம் செய்து வந்தார்.

வெற்றி

வெற்றி

சிஎஸ்கே பவுலர்கள் சாம் கரண், ஷர்துல் தாக்கூர், லுங்கி நெகிடி என அனைவரின் ஓவர்களும் பவுண்டரிகளுக்கு பறந்தது. அதிரடியாக ஆடிய பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து மிரட்டிய அவர், 34 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இதனால் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

பொல்லார்ட்டின் ஆட்டம் குறித்து பேசியுள்ள ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்டின் ஆட்டத்தை பார்த்து நிஜமாக நான் வாயடைத்து நின்றேன். இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் அவர் தொடர்ந்து இதே அதிரடி காட்டி வருகிறார். இது போன்ற ஒரு வீரர் தொடர்ந்து சிறப்பாக ஆடுவது எனக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. அவரின் ஆட்டம் ஆச்சரியப்பட வைத்துவிட்டது.

சிறப்பான போட்டி

சிறப்பான போட்டி

219 இலக்கை துரத்தி வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு மேல் எனக்கு தெரிந்து ஒரு போட்டி சிறப்பாக இருக்காது. இதுபோன்ற ஒரு வெற்றிக்கு பிறகு மகிழ்ச்சியில் இரவு முழுவதும் உறக்கம் இருக்காது. என்னை பொறுத்தவரை 219 என்ற இலக்கை துரத்த வேண்டும் என்றால் பெரிதும் யோசிக்க கூடாது. களத்திற்கு சென்று பேட்டை சுற்ற வேண்டும் அவ்வளவு தான் என தெரிவித்துள்ளார்.

பெருமை

பெருமை

தொடரின் முக்கிய கட்டத்திற்கு நாங்கள் நகர்ந்துள்ளோம். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வெற்றி இனி வரும் போட்டிகளில் நாங்கள் பல அதிசயங்களை நிகழ்த்த உதவும் என நினைக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் பொல்லார்ட் தான். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்.

Story first published: Sunday, May 2, 2021, 13:33 [IST]
Other articles published on May 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+