Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளான் பாகுபலி.. அவர் வேண்டவே வேண்டாம்.. இன்று மட்டும் சிஎஸ்கே இவரை களமிறக்கினால் வெற்றி உறுதி!

சென்னை: பஞ்சாபிற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கியமான வீரர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

Recommended Video

IPL 2021 CSK vs PBKS: Predictable Playing 11 | OneIndia Tamil

சென்னைக்கும் பஞ்சாப்பிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த சென்னை இன்று எப்படியாவது வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது.

இன்னொரு பக்கம் பஞ்சாப் அணியோ முதல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 222 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. இதனால் இன்றும் சென்னையின் பவுலிங்கை தூசி தட்டும் திட்டத்தில் உள்ளது.

திட்டம்

திட்டம்

இன்று நடக்கும் போட்டியில் சென்னை அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. இதற்கு முன் ஆடிய பிளேயிங் லெவன் வீரர்களே இன்றும் ஆடுவார்கள். முக்கியமாக பவுலிங் ஆர்டரில் மாற்றம் எதுவும் இருக்காது என்கிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

தோனி பொதுவாக ஆடும் அணியை மாற்றிக்கொண்டே இருக்க மாட்டார். கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலிங் மோசமாக இருந்தது. முக்கியமாக சாகரின் பவுலிங் மோசமாக இருந்தது. இவரின் ஸ்விங்கும் இல்லை, பவுன்சரும் இல்லை.

கோரிக்கை

கோரிக்கை

கடந்த 2 வருடமாக சாகர் சரியான பார்மில் இல்லை. இதனால் அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. மாறாக இவருக்கு பதிலாக ஆந்திராவின் பாகுபலி என்று அழைக்கப்படும் இளம் வீரர் ஹரி சங்கரை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகிறது.

பயிற்சி

பயிற்சி

பயிற்சி ஆட்டங்களில் ஹரி சங்கர் ரெட்டி சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். முக்கியமாக டெத் ஓவர்களிலும், பவர் பிளேவிலும் நன்றாக பவுலிங் செய்து வருகிறார். இதனால் சாகர் வேண்டவே வேண்டாம் அவருக்கு பதிலாக இன்று ரெட்டியை களமிறக்கலாம் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.

Story first published: Friday, April 16, 2021, 14:58 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+