Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர மாறி காசுக்காக அத பண்ணமாட்ட.. அக்‌ஷய் குமார் குறித்து ஹர்பிரீத் கடும் சாடல்.. ஏன் இந்த கோபம்!

அகமதாபாத்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அசத்திய பஞ்சாப் வீரர் ஹர்ப்ரீத் பிரார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை வம்புக்கு சீண்டியுள்ளார்.

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இளம் வீரர் ஹர்பிரீத் பிராரின் பந்துவீச்சு இருந்தது.

பந்துவீச்சு

பந்துவீச்சு

முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 179/5 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்துத் தடுமாறியது. குறிப்பாக, இளம் பௌலர் ஹர்ப்ரீத் பிரார் சிறப்பாகப் பந்துவீசி அதிரடி வீரர்கள் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவிலியர்ஸ் ஆகியோர் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார்.

கருத்து

கருத்து

இந்த போட்டிக்கு பிறகு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ஹர்ப்ரீத் சிங் டர்பன் அணிந்து பார்ப்பதற்கு 'சிங் இஸ் ப்ளிங்' படத்தில் நடித்த அக்‌ஷய் குமாரை போன்று உள்ளதாக அவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அக்‌ஷய் குமார்

ஹர்ப்ரீத் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இதனை கண்டு கோபமடைந்த அவர், அந்த மெசேஜின் ஸ்கிரீன் ஷாட்டை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு, நான் ஒன்றும் அக்‌ஷய் குமாரை போல காசு வாங்கிக்கொண்டு டர்பன் அணிபவன் அல்ல என காட்டமாக தெரிவித்துள்ளார். அதே போல விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #isupportfarmers என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

டர்பன் அணிவது குறித்து ரசிகர் ஒருவர் சகஜமாக கூறிய கருத்துக்கு ஹர்ப்ரீத் பிரார், நடிகர் அக்‌ஷய் குமாரை வம்புக்கு இழுப்பதை போன்று பதிலடி கொடுத்துள்ளார். இதனால் அக்‌ஷய் குமாரின் ரசிகர்கள் சிலர் ஹர்ப்ரீத் பிராருக்கு எதிராக சமூக வலைதளங்களில் களமிறங்கியுள்ளனர்.

Story first published: Saturday, May 1, 2021, 17:38 [IST]
Other articles published on May 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+