டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்.. அந்த இளம் வீரரை பாருங்க.. அதே வெறி.. நடராஜன் இனிதான் கவனமா இருக்கணும்!
சென்னை: பெங்களூர் அணியில் அறிமுகம் ஆகி ஆடி வரும் ஹர்ஷல் பட்டேல் கிரிக்கெட் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் ஹைதராபாத் பெங்களூர் இடையே ஐபிஎல் லீக் போட்டி நடந்தது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 149 எடுத்தது. இதையடுத்து ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
நேற்று பெங்களூர் அணியின் வெற்றிக்கு டெத் ஓவர்களில் பவுலிங் செய்த வீரர்கள் முக்கிய காரணமாக இருந்தனர். முக்கியமாக சபாஷ் அகமது, ஹர்ஷல் பட்டேல் இருவரும் பெங்களூர் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர்.

விக்கெட்
நேற்று பெங்களூர் அணிக்காக பவுலிங் செய்த ஹர்ஷல் பட்டேல் கடைசி ஓவரில் மட்டும் 2 விக்கெட் எடுத்தார். 4 ஓவர்கள் வீசிய இவர் வெறும் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் எடுத்துள்ளார். இதற்கு முந்தைய போட்டியிலும் ஹர்ஷல் பட்டேல் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார்.

சிறப்பு
ஹர்ஷல் பட்டேல் பெங்களூர் அணிக்காக முதல் போட்டியிலேயே 5 விக்கெட் எடுத்துள்ளார். அதிலும் கடைசி ஓவரில் மட்டும் அந்த போட்டியில் இவர் 3 விக்கெட் எடுத்தார். இவர் கடைசி ஓவரில் யார்க்கர் போடும் விதம், ஸ்லோ பால் வீசும் விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

கவனம்
குஜராத்தை சேர்ந்த இவர் 2011ல் ஹரியானா ரஞ்சி அணியில் தேர்வானார். அந்த தொடரில் இரண்டு போட்டிகளில் 8,8 விக்கெட்டுகளை எடுத்தார். கடந்த வருடம் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய ஹர்ஷல் 2021 ஏலத்தில் பெங்களூர் அணியால் எடுக்கப்பட்டார்.

டெத் ஓவர்
இவர் டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்வதால், நடராஜனும் சிறப்பாக ஓவர் போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இரண்டு பேரின் யார்க்கர் ஸ்டைலும் ஒரே மாதிரி இருக்கிறது. நடராஜன் தன்னுடைய இடத்தை தக்க வைக்க வேண்டும் என்றால் இன்னும் சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications