Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 விக்கெட்.. யார்யா இவரு.. மொத்தமாக மேட்சையே புரட்டி போட்ட ஹர்ஷல் பட்டேல்.. கோலியின் புது நம்பிக்கை!

சென்னை: மும்பை அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து உள்ளார்.

Recommended Video

RCB-யின் 'ரட்சகன்' Harshal Patel.. உருக்கமான கதை! | Oneindia Tamil

மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. முதலில் மிகவும் சிறப்பாக ஆடிய மும்பை அணி கடைசி கட்டத்தில் கடுமையாக திணறியது.

பெங்களூருக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து ரன்கள் எடுத்துள்ளது.

பெங்களூர்

பெங்களூர்

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி பெங்களூருக்கு ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் 10 ஓவரிலேயே மும்பை அணி 90 ரன்கள் எடுத்தது. மும்பை எப்படியும் 180-200 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த 10 ஓவரில் பெங்களூர் அணி சிறப்பாக பவுலிங் செய்தது.

பவுலிங்

பவுலிங்

அதிலும் பெங்களூர் அணிக்காக புதிதாக களமிறங்கி இருக்கும் ஹர்ஷல் பட்டேல் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக பவுலிங் செய்தார். இவரின் முதல் 2 ஓவர் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் அடுத்த 2 ஓவர்கள் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். அதிலும் கடைசி ஓவரில் இவர் மும்பை அணியை மொத்தமாக காலி செய்தார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

முதல் 2 ஓவரில் 2 விக்கெட் எடுத்த ஹர்ஷல் பட்டேல், கடைசி ஓவரில் 3 விக்கெட் எடுத்தார். அதிலும் மும்பையின் முக்கியமான வீரர்களான இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்ணால் பாண்டியா என்று வரிசையாக விக்கெட் எடுத்தார். இவர் வெறும் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

செம்ம

செம்ம

பெங்களூர் அணியின் புதிய டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக உருவெடுத்துள்ளார். மும்பை வசம் இருந்த போட்டியை மொத்தமாக புரட்டி போட்டுள்ளார். 30 வயதான இவர் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி உள்ளார். டெல்லிக்காக சில போட்டிகளில் நன்றாக ஆடி இருக்கிறார். பெங்களூர் அணிக்காக பயிற்சி ஆட்டங்களில் நன்றாக ஆடினார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

பயிற்சி ஆட்டங்களில் நன்றாக பவுலிங் செய்ததோடு, பேட்டிங் செய்து பினிஷிங்கும் செய்தார். இதுவரை 49 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 51 விக்கெட் எடுத்துள்ளார். பெங்களூருக்காக ஆடிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட் எடுத்து கோலியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

Story first published: Friday, April 9, 2021, 21:50 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+