Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி சேப்பாக்கமே தேவையில்லை.. மும்பையை மொத்தமாக மாற்றிய சிஎஸ்கே.. இதுதான் சூட்சமம்.. குட்நியூஸ்!

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தை சிஎஸ்கே அணி தனக்கு ஏற்றபடி மாற்றியுள்ளது. கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு வரும் போட்டிகளில் இது உதவும்.

Recommended Video

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்.. CSK-வுக்கு எதிராக தமிழில் ஸ்கெட்ச் போட்ட வீரர்கள்

2021 ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி தோல்வியோடுதான் தொடங்கியது. டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பையில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

அதன்பின் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சிஎஸ்கே முதல் வெற்றியை பதிவு செய்தது. சிஎஸ்கே அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது.

பவுலிங்

பவுலிங்

டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலிங் அவ்வளவு நன்றாக இல்லை. இதற்கு காரணம் மும்பை அணியின் பிட்ச்தான். இது பேட்டிங் பிட்ச் ஆகும். மும்பை பிட்சில் பவுலர்கள் வேகமாக வீச வேண்டும், பவுன்சர்களை வீச வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும்,

ஒத்துழைக்கவில்லை

ஒத்துழைக்கவில்லை

முதல் போட்டியில் மும்பை பிட்ச் ஒத்துழைக்காத காரணத்தால் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து சிஎஸ்கே தற்போது மும்பை பிட்சை மொத்தமாக மாற்றியுள்ளது. மொத்தமாக இதை ஒரு ஸ்லோ பிட்ச் போல மாற்றியுள்ளது.

மாற்றம்

மாற்றம்

அதாவது இந்த பிட்சில் இனி ஸ்லோ பால் வீசி விக்கெட் எடுக்க முடியும். அதேபோல் இங்கு பெரிய அளவில் பந்து ஸ்விங் ஆகும். கட்டர்களை வீச முடியும். ஒரு பேட்டிங் பிட்ச் போல் செயல்படாது. இதுதான் நேற்று சிஎஸ்கேவின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது.

சேப்பாக்கம்

சேப்பாக்கம்

சேப்பாக்கம் பிட்ச் இதேபோல்தான் 5-6 வருடங்களுக்கு பின் சிஎஸ்கே அணிக்கு உதவியது. அதன்பின் சிஎஸ்கே அணிக்கு பிட்ச் உதவவில்லை. தற்போது இரண்டாவது போட்டியிலேயே மும்பை சிஎஸ்கே அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.

விருப்பம்

விருப்பம்

சிஎஸ்கே அணியின் விருப்பத்திற்கு ஏற்றபடி பிட்ச் மாற்றப்பட்டுள்ளது. இனி சேப்பாக்கம் தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு மும்பை பிட்ச் சிஎஸ்கேவிற்கு சாதகமாகி உள்ளது. இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கேவிற்கு இது கண்டிப்பாக உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 17, 2021, 13:00 [IST]
Other articles published on Apr 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+