Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கருப்பாக மாறியது".. மும்பை, ஆர்சிபி இரண்டுக்கும் ஆப்பு வைத்த சென்னை.. எதிர்பார்க்காத திருப்பம்!

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் மொத்தமாக மாற்றப்பட்டு உள்ளது. மும்பை, பெங்களூர் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டி என்பதால் இன்றைய ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முதல் ஐபிஎல் போட்டிக்காக கடந்த ஒரு வாரமாக பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்காக பிட்ச் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

பொதுவாக சென்னை பிட்ச் என்பது ஸ்பின் பவுலிங் பிட்ச் ஆகும். இங்கு ஸ்பின் பவுலர்களால் எளிதாக விக்கெட் எடுக்க முடியும். இதனால்தான் எப்போதும் சிஎஸ்கே அணி வீரர்களை ஏலம் எடுக்கும் போது பிட்சை மனதில் வைத்து, ஸ்பின் பவுலர்களை அதிகமாக ஏலம் எடுக்கும். ஸ்பின் பவுலர்களை தோனி குறி வைக்கவும் இதுவே காரணம்.

ஆனால்

ஆனால்

ஆனால் இந்த முறை சென்னை அணி, சேப்பாக்கத்தில் ஆடவில்லை. மாறாக சென்னை அணி இந்த முறை மும்பை, டெல்லி உள்ளிட்ட மைதானங்களில் ஆடுகிறது. மாறாக சென்னை மைதானத்தில் மும்பை, பெங்களூர், கொல்கத்தா போன்ற அணிகள் ஆடுகிறது. இந்த முறை எந்த அணிக்கும் ஹோம் பிட்ச் கிடையாது.

பிட்ச்

பிட்ச்

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஆடாத நிலையில் தற்போது சேப்பாக்கம் பிட்சும் மாற்றப்பட்டுள்ளது. ஸ்பின் பிட்சாக இருந்த சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது கூடுதலாக களிமண் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் பிட்ச் கருப்பாக மாறி உள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் பிட்ச் கருப்பாக மாறியுள்ளது. அதே சமயம் பந்து பெரிதாக ஸ்பின் ஆகாது.

ஸ்பின்

ஸ்பின்

சென்னை அணிக்கு சாதகமாக அமைந்தது போல பிட்ச் மும்பை, பெங்களூர் அணிக்கு சாதகமாக அமையாது. மாறாக இரண்டு அணிக்கும் சவாலாகவே இருக்கும். இது இரண்டு அணிக்கும் ஹோம் பிட்ச் இல்லை என்பதால், இரண்டு அணிக்கும் சவாலாக இருக்கும் வகையில் இப்படி மாற்றப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஸ்பின் பவுலிங்கை பயன்படுத்தி வெற்றிபெறலாம் என்று நம்பிய பெங்களூர், மும்பை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

பிட்ச்

பிட்ச்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சென்னை பிட்ச் விமர்சனத்திற்கு உள்ளானது. இதன் காரணமாகவே இந்த முறை சென்னை பிட்ச் எதற்கும் சாதகமாக இல்லாமல், கூடுதலாக களிமண் சேர்த்து மாற்றப்பட்டுள்ளது. இதனால் இன்று நடக்கும் போட்டி எப்படி இருக்கும், களிமண் தரையை எந்த அணி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Friday, April 9, 2021, 15:37 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+