Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அதுதான் முக்கியம்".. போட்டிக்கு முன்பே சொல்லிவிட்டு செய்த தோனி.. பஞ்சாப்பை காலி செய்த அந்த 4 ஓவர்!

சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று போட்டி தொடங்கும் முன்பே கேப்டன் தோனி சிஎஸ்கேவின் பிளான் என்ன என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே சிறப்பாக பவுலிங் செய்து வருகிறது. டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த சிஎஸ்கே முதல் பவர் பிளேவிலேயே 4 விக்கெட் பின் அடுத்த ஓவரிலேயே 1 விக்கெட் எடுத்து அசத்தி உள்ளது.

சிஎஸ்கேவின் அதிரடி பவுலிங் காரணமாக பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் வெறும் 25 ரன்னுக்கு அவுட் ஆனார்கள்.

எப்படி

எப்படி

கடந்த போட்டியில் பவுலிங்கில் சொதப்பிய சிஎஸ்கே அணி இந்த போட்டியில் எப்படி விக்கெட் எடுத்தது என்ற கேள்வி கண்டிப்பாக பலருக்கும் எழும். சிஎஸ்கே இன்று சிறப்பாக பவுலிங் செய்ய முக்கியமான ஒரு காரணம் உள்ளது.

முதல் காரணம்

முதல் காரணம்

சிஎஸ்கே இன்று டாஸ் வென்றது முக்கிய காரணம். டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. பிட்ச் போக போக பனி காரணமாக பேட்டிங் செய்ய சாதகம் ஆகும். இதனால் தொடக்கத்தில் பவுலிங் செய்ய சாதகமாக இருக்கும். இதைத்தான் இன்று சிஎஸ்கே பயன்படுத்திக்கொண்டது.

தோனி

தோனி

இதை ஆட்டத்திற்கு முன்பே தோனி சொல்லிவிட்டதான் சென்றார். பிட்ச் முதல் 4-6 ஓவர்கள் பவுலிங் செய்ய சாதகமாக இருக்கும். இதில்தான் விக்கெட் எடுக்க வேண்டும். இந்த ஓவர்கள் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான ஓவராக இருக்கும் என்று தோனி குறிப்பிட்டு இருந்தார்.

அந்த 4 ஓவர்

அந்த 4 ஓவர்

தோனி சொன்னபடிதான் முதல் 4 ஓவரில் பஞ்சாப் 3 விக்கெட்டுகளை இழந்தது. பனி காரணமாக பிட்ச் மாறும் முன் சிஎஸ்கே வரிசையாக விக்கெட்டுகளை எடுத்தது. அதிலும் 4 ஓவர்களை வீசி, சாகர் எடுத்த 4 விக்கெட்தான் மொத்தமாக ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

Story first published: Friday, April 16, 2021, 20:35 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+