
ஹோட்டல் அறைகள்
ஒரு குறிப்பிட்ட விதிமுறை இல்லாமல் அணிகள் தங்களது போக்கில் மைனாத்திற்கு மிகவும் தொலைவில் ஹோட்டல் அறைகளை புக் செய்தது பயோ பபுள் உடைய காரணமாக அமைந்திருக்கும். உதாரணத்திற்கு ஒரு அணி, ஷாப்பிங் மாலின் உள்ளே உள்ள ஹோட்டலை புக் செய்து தங்கியிருந்துள்ளனர். அதே போல ஒரு அணி ஹோட்டலை காலி செய்துவிட்டு பிறகு 12 நாட்கள் கழித்து அதே ஹோட்டலில் ரூம் எடுத்துள்ளனர். இடைபட்ட 12 நாட்கள் வேறு கஷ்டமர்களின் பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

விமான பயணம்
ஐபிஎல் தொடரின் தொடக்கம் முதல் தற்போது வரை விமான போக்குவரத்தால் தான் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒரு நகரம் விட்டு மற்றொரு நகரத்திற்கு செல்லும் போது வீரர்கள் எளிதாக கொரோனாவால் தாக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு 2 வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் விமான பயணத்தின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

போட்டி மைதானங்கள்
பார்வையாளருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும், போட்டிகள் 6 மைதானங்களில் திட்டமிடப்பட்டிருந்தன. பல்வேறு முதலீட்டாளர்கள், முழு தொடரையும் ஒரே நகரத்தில் நடத்த வேண்டும், அல்லது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற வேண்டும் என கோரினர். ஆனால் பிசிசிஐ ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது, ஆனால் பல்வேறு மைதானங்களில் போட்டி நடைபெறும் என அறிவித்தது. இதுவும் பயோபபுள் உடைந்ததற்கான காரணமாக இருக்கலாம்.

பயிற்சிகள்
அனைத்து அணிகளும் மைதான ஊழியர்களை பயிற்சிகளுக்காக பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களுக்காக எந்த பயோபபுளும் ஏற்படுத்தவில்லை. சென்னை மற்றும் டெல்லியில் பணியாற்றிய மைதான ஊழியர்கள் பலருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது அணிகள் செய்த மிகப்பெரும் தவறாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











