For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நொடி வரை திக்திக்.. கலங்க வைத்த ராணா.. போராடி தோற்றது ஹைதராபாத்.. கொல்கத்தா மாஸ் வெற்றி!

சென்னை: ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

Recommended Video

KKRக்கு சின்ன விசில் அடிங்க - Dinesh karthik அன்பான வேண்டுகோள் |Oneindia Tamil

கொல்கத்தாவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக ஆடி 20 ஓவருக்கு 187/6 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத்திற்கு கொல்கத்தா 188 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் கடைசி ஓவர் வரை போராடி தோல்வி அடைந்தது. ஹைதராபாத் 177 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கொல்கத்தா வெற்றி அடைந்தது.

சேப்பாக்கம்

சேப்பாக்கம்

இந்த நிலையில், கொல்கத்தாவிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையிலான போட்டி இன்று சேப்பாக்கத்தில் மைதானத்தில் நடக்கிறது. கொல்கத்தா, ஹைதராபாத் இரண்டு அணியும் சமமான பலத்துடன் களமிறங்கி உள்ளது. சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைக்கும் என்றாலும் கடந்த மும்பை vs பெங்களூர் போட்டியில் ஸ்பின் பவுலர்கள் சரியாக பந்து வீசவில்லை.

ஸ்பின்

ஸ்பின்

முக்கியமாக இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்த ஸ்பின் பவுலர்கள் மோசமாக சொதப்பினார்கள். இதனால் இன்று நடக்கும் போட்டியில் பாஸ்ட் பவுலிங்கே அதிக முக்கியத்துவம் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஏன்

ஏன்

சென்னை பிட்சில் இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்வது கஷ்டம் என்பதால் ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இன்று ஆடும் போட்டியில் ஹைதராபாத் அணியில், டேவிட் வார்னர், ஜானி பிரைஸ்டோ, சாகா, மனிஷ் பாண்டதே, விஜய்சங்கர் , அப்துல் சமாதி, முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், சந்தீப் சர்மா ஆகியோர் ஆடுகிறார்கள்.

கொல்கத்தா

கொல்கத்தா

இன்று ஆடும் கொல்கத்தா அணியில் சுப்மான் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, ரசல், ஷாகிப் அல் ஹசன், பாட் கும்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஆடுகிறார்கள்.

பேட்டிங்

பேட்டிங்

முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. முக்கியமாக கொல்கத்தாவின் ராணா, ராகுல் திரிப்பாதி இரண்டு பேரும் ஹைதராபாத் பவுலர்களை அடித்து துவைத்தனர். ஓப்பனிங் இறங்கிய ராணா வெறும் 56 பந்தில் 80 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம்.

பக்கம்

பக்கம்

இன்னொரு பக்கம் ராகுலும் 29 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடக்கம். 16 ஓவர்கள் வரை கொல்கத்தா அதிரடியாக ஆடியது. ஆனால் கடைசி கட்டத்தில் நடராஜன், நபி, ரஷீத் கான் அடுத்தடுத்து விக்கெட் எடுத்தனர். இதனால் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக ஆடி 20 ஓவருக்கு 187/6 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத்திற்கு கொல்கத்தா 188 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

இதையடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி தொடக்கத்திலேயே வார்னர், சாகா விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் பிரைஸ்டோ, மணீஷ் பாண்டே இருவரும் அதிரடியாக ஆடினார். இரண்டு பேருமே அரை சதம் அடித்து நம்பிக்கை கொடுத்தனர். ஆனால் ஹைதரபாத் அணியில் மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

விஜய் சங்கர், நபி இருவருமே வந்த வேகத்தில் அவுட்டாகி சென்றனர். கடைசியில் வந்த சமத் 8 பாலில் 19 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தாலும் அவருக்கு பெரிய அளவில் ஸ்டிரைக் கிடைக்கவில்லை. இதனால் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து ஹைதராபாத் 177 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வி அடைந்தது. 2021 ஐபிஎல் தொடரை கொல்கத்தா வெற்றியோடு தொடங்கி உள்ளது.

Story first published: Sunday, April 11, 2021, 23:23 [IST]
Other articles published on Apr 11, 2021
English summary
IPL 2021: Hydrabad wins the toss choose to bowl against Kolkata in Chepauk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+