Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'நான் ரஜினியின் தீவிர ரசிகன்.. மிகப்பெரிய ஆசையே அதுதான்' பஞ்ச் டயலாக் பேசி அசத்திய கே.கே.ஆர் வீரர்!

அமீரகம்: ஐபிஎல்-ல் கலக்கி வரும் வெங்கடேஷ் ஐயர், நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 2வது பாதி ஆட்டம் கடந்த செப்டம்பர் 19ம் தேதியன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

இந்த தொடரில் தற்போது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரரின் கவனத்தை ஈர்த்துள்ளவர் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர்

ஐபிஎல்-ல் முதல் வாய்ப்பு

ஐபிஎல்-ல் முதல் வாய்ப்பு

இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தின் போது வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. முதல் பாதி தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் 2வது பாதி தொடரில் கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி வருகிறார். அதிலும் அதிவேகமாக அரைசதம் அடித்துள்ளார்.

முதல் போட்டி

முதல் போட்டி

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான வெங்கடேஷ் ஐயர், 27 பந்துகளில் 41 ரன்களை விளாசினார். எனினும் அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இதனால் அந்த அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதே போல நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்து அவர் அசத்தினார்.

முதல் அரைசதம்

முதல் அரைசதம்

157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டம் தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. 30 பந்துகளை சந்தித்த அவர் 53 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்ஸர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உலகின் தலைசிறந்த பவுலர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோரின் பந்துகளை தான் வெங்கடேஷ் ஐயர் வெளுத்து வாங்கினார்.

Recommended Video

MI Vs KKR Match Highlights |MI அணியை சுக்குநூறாக்கிய KKR | IPL 2021
 வெங்கடேஷ் பேட்டி

வெங்கடேஷ் பேட்டி

இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய வெங்கடேஷ் ஐயர், நான் சவுரவ் கங்குலியின் மிகத்தீவிர ரசிகன். அவர்தான் முன்னர் கொல்கத்தா அணியை வழிநடத்தினார். அவருக்காகதான் நான் ஆரம்பம் முதலே கொல்கத்தா அணியில் இணைய வேண்டும் என ஆசைப்பட்டேன். அதன்படியே எனக்கு வாய்ப்பும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ரஜினியின் ரசிகர்

ரஜினியின் ரசிகர்

தொடர்ந்து பேசிய அவரிடம் ரஜினியின் ரசிகனா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஆம், நான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிகத் தீவிர ரசிகன். அவரது அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்து விடுவேன். நான் இந்தூரில் ஒரு முறை இருந்தபோது, அவரின் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காகவே சென்னை சென்றேன்.

நன்றி ரஜினி சார்

நன்றி ரஜினி சார்

என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணமாக ரஜினிகாந்தை சந்திக்கும் நாள்தான் இருக்கும். அவரது படத்தில் 'என் வழி தனி வழி' என்ற வசனம் தான் எனக்கு பிடித்த டயலாக் ஆகும். இந்த டயலாக் மூலம் எனக்கு ஊக்கம் கொடுத்ததற்கு நன்றி ரஜினி சார் என வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Story first published: Friday, September 24, 2021, 19:27 [IST]
Other articles published on Sep 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+