Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் எல்லாம் இப்ப முக்கியமே இல்லை.. சிஎஸ்கே குறித்து உருக்கமாக பேசிய இம்ரான் தாஹிர்.. என்ன மனுஷன்யா!

சென்னை: சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து அணியின் மூத்த வீரர் இம்ரான் தாஹிர் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Dhoni சுய விமர்சனம்.. 'அந்த 6 Ball, Match-ல தோத்து இருப்போம்..' | Oneindia Tamil

சிஎஸ்கே அணியில் முக்கியமான வீரர்களில் ஒருவர் இம்ரான் தாஹிர். 2019ல் சிஎஸ்கே அணிக்கு அதிக விக்கெட் எடுத்த வீரர் இவர்தான். அந்த சீசனிலேயே அதிக விக்கெட்டுகளை இவர்தான் எடுத்தார்.

ஆனால் வெளிநாட்டு வீரர்கள் கோட்டா சிக்கல் காரணமாக 2020 தொடரில் பெரிய அளவில் சிஎஸ்கே அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டு - மூன்று போட்டிகள்தான் ஆடினார்.

ஆட்டம்

ஆட்டம்

அதன்பின் இந்த வருடமும் இம்ரான் தாஹிருக்கு பெரிய அளவில் சிஎஸ்கே அணியில் ஆடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் எதிலும் இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு பதிலாக மொயின் அலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேலும் கிடைப்பது சந்தேகம்தான்.

சந்தேகம்

சந்தேகம்

எப்போதும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இம்ரான் தாஹிர் சிஎஸ்கே குறித்து பாராட்டியே பேசுவார். எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் பிரச்சனை இல்லை. நான் எப்போதும் என்னுடைய அணிக்கு ஆதரவாக இருப்பேன். என்னுடைய சிஎஸ்கே அணி எடுக்கும் முடிவை எப்போதும் நான் ஆதரிப்பேன் என்று இம்ரான் தாஹிர் குறிப்பிட்டு வருகிறார்.

நேற்று

நேற்று

இந்த நிலையில் நேற்று இம்ரான் தாஹிரிடம் உங்களை எப்போது பிளேயிங் லெவனில் பார்க்கலாம் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். இதற்கு இம்ரான் தாஹிர் சிறப்பாக பதில் அளித்தார். அதில், ரொம்ப நன்றி சார். நல்ல வீரர்கள்தான் களத்தில் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாக ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இதேபோல் நம்ம அணிக்காக தொடர்ந்து ஆட வேண்டும்.

ஆட்டம்

ஆட்டம்

அணியின் நன்மைதான் முக்கியம். நான் எல்லாம் இப்போது முக்கியம் இல்லை. இந்த அணியில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் என் அணிக்காக நான் நன்றாக ஆடுவேன் என்று இம்ரான் தாஹிர் உருக்கமாக கூறியுள்ளார். கடந்த வருடம் போல இந்த வருடமும் இம்ரான் தாஹிர் இப்படி பேசியது சிஎஸ்கே ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Story first published: Tuesday, April 20, 2021, 9:59 [IST]
Other articles published on Apr 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+