Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் செட்டாக மாட்டார்.. எல்லாம் தலைகீழாக மாறுகிறது.. சிஎஸ்கேவில் மாற்றப்படும் துணை கேப்டன்? பின்னணி

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவின் துணை கேப்டன் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.

2021 ஐபிஎல் தொடர் இன்று தொடங்க உள்ளது. இன்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் ஆட்டம் நடக்கிறது.

நாளை சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் மேட்ச் நடக்க உள்ளது. சென்னை அணி இந்த சீசனில் எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது.

தகவல்

தகவல்

இந்த நிலையில் இந்த சீசனில் சிஎஸ்கேவின் துணை கேப்டன் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. சிஎஸ்கேவின் துணை கேப்டனாக ரெய்னா இருக்கிறார். இவர் கடந்த சீசனில் ஆடவில்லை. குடும்ப காரணங்களால் இவர் கடந்த சீசனில் ஆடவில்லை.

டு பிளசிஸ்

டு பிளசிஸ்

இதனால் கடந்த சீசனில் டு பிளசிஸ் சிஎஸ்கே அணியில் துணை கேப்டனாக இருந்தார். இந்த நிலையில் 2021 சீசனில் ரெய்னா மீண்டும் அணிக்குள் வந்துவிட்டார். ஆனால் இன்னும் துணை கேப்டன் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

மாற்றம்

மாற்றம்

இந்த சீசனில் ரெய்னாவிற்கு துணை கேப்டன் பதவியை கொடுக்காமல் ஜடேஜாவிற்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். ஜடேஜா தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். அவருக்கு நல்ல அனுபவமும் இல்லை.

துணை

துணை

இவரை துணை கேப்டனாக நியமித்தால் அது சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் உதவும். ரெய்னா பார்மில் இல்லாததால் அவர் துணை கேப்டன் பொறுப்பிற்கு செட்டாக மாட்டார் என்கிறார்கள். இதனால் துணை கேப்டன் மாற்றம் குறித்து சிஎஸ்கே விரைவில் முடிவு எடுக்கும் என்கிறார்கள்.

Story first published: Friday, April 9, 2021, 10:07 [IST]
Other articles published on Apr 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+