Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ல் தொடரும் பதற்றம்.. நியூசிலாந்து வீரர்களும் பேக் அப் செய்ய திட்டமா?.. முழு விவரம்

மும்பை: ஆஸ்திரேலிய வீரர்களை தொடர்ந்து நியூசிலாந்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரை விட்டு அயல்நாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் தொடரில் இருந்து விலகி, பபுளில் இருந்து வெளியேறிவிட்டனர்.

 கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு அந்நாட்டு அரசு மே 15வரை தடை விதித்துள்ளது. எனவே இது நீட்டிக்க கூடிய வாய்ப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் வெளியேறி வருகின்றனர். இதனைதொடர்ந்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து வீரர்களும் தொடரில் இருந்து வெளியேறுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நியூசிலாந்து விளக்கம்

நியூசிலாந்து விளக்கம்

இந்நிலையில் நியூசிலாந்து தரப்பில் அதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் தலைமை செயல் அதிகாரி ஹெத் மில்ஸ், இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகளவில் இருந்தாலும், நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் தங்கி ஐபிஎல்லில் தொடரில் விளையாடுவார்கள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஐபிஎல் அணிகளின் பயோ பபுளில் ஒவ்வொரு வீரரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக கருதுகின்றனர். ஆனால் ஒரு நகரம் விட்டு மற்றொரு நகரம் மாறும் போது வீரர்களுக்கு ஆபத்து இருப்பதாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் தங்கள் ஐபிஎல் அணிகளால் நன்கு கவனிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளனர். இதுவரை ஒரு வீரர் கூட நியுசிலாந்து திரும்ப வேண்டும் என கேட்கவில்லை எனத்தெரிவித்துள்ளார். இந்த தொடரில் நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல், பெர்குசன, கெயில் ஜேமிசன், ஸ்டீபன் ஃப்ளெம்மிங், மிட்சன் சாண்ட்னர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

உத்தரவாதம்

உத்தரவாதம்

இதனிடையே ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் யாரும் பயப்பட தேவையில்லை என்றும் பிசிசிஐ உத்தரவாதம் அளித்துள்ளது. கடந்த ஏப்.9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 21 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த தொடர் வரும் மே30ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, April 27, 2021, 17:48 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+