
ஆர்சிபி
முதல் போட்டி குறித்து பேசியுள்ள இஷான் கிஷான், ஆர்சிபி அணியில் பல சிறந்த வீரர்களும், சாம்பவான்களும் உள்ளனர். இந்நிலையில் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் பந்துவீச்சாளர் கெயில் ஜேமிசன் ஆகியோரும் புதிதாக அணியில் இணைந்திருப்பதால் அந்த அணி தற்போது மேலும் பலமடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இரு வீரர்கள்
ஆர்.சி.பி அணியால் இந்தாண்டு அதிகபட்ச தொகைக்கு எடுக்கப்பட்டவர்கள் மேக்ஸ்வெல் மற்றும் கெயில் ஜேமிசன். இதில் பஞ்சாப் அணியால் கலட்டிவிடப்பட்ட மேக்ஸ்வெல் மீது நம்பிக்கை வைத்து ரூ.14.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதே போல நியூசிலாந்து வீரர் கெயில் ஜேமிசன் அதிகபட்ச தொகையாக ரூ. 15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இஷான் கிஷான்
தொடர்ந்து பேசிய இஷான் கிஷான் இந்த முறை தொடரின் முதல் போட்டியிலேயே சிறந்த வெற்றி பெற வேண்டும் என திட்டவட்டமாக உள்ளோம். இதற்காக கடந்த ஆண்டே நாங்கள் கலந்தாலோசனை செய்தோம். எங்கள் அணியில் தனிப்பட்ட வீரரை எப்போதும் நம்பியிருந்ததில்லை. ஒரு அணியின் சிறந்த செயல்பாடாகதான் இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் ஆட்ட நாயகன் விருது பெறுவோம். அதுவே எங்கள் அணியின் சிறப்பு.

மும்பை அணி
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2013ம் ஆண்டு முதல் இதுவரை, தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறவே இல்லை. ஆனால் இதுவே இவர்களுக்கு நம்பிக்கை தரும் விஷயமாக அமைந்துவிடுகிறது. ஏனென்றால் அதன்பிறகு அந்த அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகள் தொடர் வெற்றியை பெற்றுள்ளதால் இந்த முறை ஹாட்ரிக் அடிப்பதற்காக காத்துள்ளது.


Click it and Unblock the Notifications