Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாய்ப்பே இல்லை.. அடுத்த 2 மேட்ச் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்.. சிஎஸ்கே நினைத்து பார்க்காத பெரிய சிக்கல்

சென்னை: சிஎஸ்கே அணிக்கு அடுத்த 2 ஐபிஎல் போட்டிகள் மிகவும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. வெற்றிபெற வேண்டிய போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலிங் சொதப்பியதால் அந்த அணி தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே அணியின் பவுலிங் தற்போது மிகவும் மோசமாக இருக்கிறது. முக்கியமாக நல்ல பாஸ்ட் பவுலர்கள் இல்லாமல் தோனி கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

கஷ்டம்

கஷ்டம்

இந்த நிலையில் சிஎஸ்கே அடுத்தடுத்த போட்டிகளில் வரிசையாக "கடப்பாரை" அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. 16ம் தேதி நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி பஞ்சாப்பை எதிர்கொள்ள உள்ளது. அதற்கு அடுத்து 19ம் தேதி நடக்கும் போட்டியில் ராஜஸ்தானை சிஎஸ்கே எதிர்கொள்ள உள்ளது.

எங்கே

எங்கே

இந்த இரண்டு போட்டியும் மும்பை பிட்சில் நடக்க உள்ளது. மும்பை பிட்ச் பேட்டிங் பிட்ச் ஆகும். இங்குதான் நேற்று பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 221 ரன்கள் எடுத்தது. அதோடு ராஜஸ்தான் அணி 217 ரன்கள் வரை சேஸிங்கில் எடுத்தது.

சேசிங்

சேசிங்

இந்த இரண்டு அணியையும்தான் அடுத்தடுத்து சிஎஸ்கே இதே மும்பை பிட்சில் எதிர்கொள்ள போகிறது. இந்த பிட்சில் சிஎஸ்கே சார்பாக அதிரடியாக பவுலிங் செய்ய சிறப்பான வீரர்கள் யாரும் இல்லை. ராஜஸ்தான், பஞ்சாப் அணியில் நல்ல பாஸ்ட் பவுலர்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டு பவுலர்கள், உள்நாட்டு பவுலர்கள் என்று சிறப்பான பாஸ்ட் பவுலர்கள் இருக்கிறார்கள்.

மோசம்

மோசம்

இப்படி இருந்தும் கூட நேற்று போட்டியில் 210 ரன்களுக்கு மேல் இரண்டு அணிகளும் எடுத்தது. ஆனால் சிஎஸ்கே அணியிடம் இப்படி பாஸ்ட் பவுலர்கள் இல்லை, ஷரத்துல் தாக்கூர், சாகர் அவ்வளவு வேகமாக வீச மாட்டார்கள். லுங்கி நிகிடி, பெஹன்டிராப் இன்னும் அணியில் இணையவில்லை. முக்கிய பவுலர்கள் சரியாக வீசுவது இல்லை.

கஷ்டம்

கஷ்டம்

இந்த மோசமான பவுலிங் ஆர்டரை வைத்துக்கொண்டுதான் சிஎஸ்கே அணி பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை அடுத்தடுத்து எதிர்கொள்ள உள்ளது. முதல் போட்டியில் டெல்லி அணியையே சிஎஸ்கே சமாளிக்க முடியவில்லை. இதனால் அடுத்தடுத்து போட்டிகளில் சிஎஸ்கே வெற்றிபெறுவது பெரிய கஷ்டமாகி உள்ளது.

Story first published: Tuesday, April 13, 2021, 13:05 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+