Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை நம்பி வந்தேன்.. இப்படி ஒதுக்கீட்டிங்களே.. அதிர்ச்சியில் மூத்த வீரர்.. இனி எல்லாம் கஷ்டம்தான்!

சென்னை; சிஎஸ்கேவில் ஆடும் பிளேயிங் லெவனில் ராபின் உத்தப்பா இணைவது இனி கடினம்தான் என்று அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2021 ஐபிஎல்லை முன்னிட்டு சிஎஸ்கே அணியால் டிரேட் செய்யப்பட்டவர் ராபின் உத்தப்பா. ராஜஸ்தான் அணியில் இருந்து உத்தப்பா டிரேடிங் முறை மூலம் சென்னைக்கு வந்தார்.

சென்னை வந்த பின் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இவர் சிறப்பாக ஆடினார். அந்த சீசன் முழுக்க கேரளா அணிக்காக இவர் வெளுத்து வாங்கினார்.

கேரளா

கேரளா

கேரள அணியின் ஒப்பனராக களமிறங்கி உத்தப்பா மாஸ் காட்டினார். அப்போதே சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் இறங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை உத்தப்பா வெளிப்படுத்தினார். சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் இறங்கி ஆட வேண்டும்.

வெற்றி

வெற்றி

சிஎஸ்கேவிற்கு வலிமையான தொடக்கம் கொடுக்க வேண்டும். ஓப்பனிங் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதிரடியாக ஆடுவேன் என்று உத்தப்பா கூறினார். ஆனால் நேற்று உத்தப்பாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக ரூத்துராஜ், டு பிளசிஸ் இறங்கினார்கள்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

அதேபோல் ராயுடுவிற்கும் நேற்று வாய்ப்பு வழங்கப்பட்டது. நேற்று களமிறங்கிய ராயுடு மிகவும் சிறப்பாக ஆடினார்.வெறும் 16 பாலில் 23 ரன்கள் எடுத்தார். டு பிளசிஸ் அவுட் ஆனாலும் அவரை நீக்க வாய்ப்பு இல்லை. மேலும் ரூத்துராஜ் கண்டிப்பாக நீக்கப்பட வாய்ப்பு இல்லை.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இவர்கள் இன்னும் சில போட்டிகள் சொதப்பினாலும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெறுவார்கள். சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் தற்போது மிகவும் வலிமையாக இருக்கிறது. இதில் கண்டிப்பாக தோனி மாற்றம் செய்யவே வாய்ப்பு இல்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

ஒரே அணியோடு ஆடுவதே தோனியின் ஸ்டைல். இதனால் மீண்டும் உத்தப்பா அணிக்குள் கம்பேக் கொடுப்பது என்பது சவாலான விஷயமாகி உள்ளது. மீண்டும் இவர் அணிக்குள் வருவாரா, இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சிஎஸ்கேவில் எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

Story first published: Sunday, April 11, 2021, 12:11 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+