Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அவர் டீம்லயே தேவை இல்லை".. மொத்தமாக ஒதுக்க போகும் தோனி.. விளாசல்.. பரபரக்கும் பின்னணி!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் முக்கியமான வீரர் ஒருவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள்.

2021 ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் நடக்கிறது.

அதற்கு அடுத்து சென்னைக்கும் டெல்லிக்கும் இடையில் முதல் போட்டி நடக்க உள்ளது. இதில் சிஎஸ்கே அணியில் ஆட போகும் வீரர் யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த போட்டிக்காக சிஎஸ்கே கடந்த ஒன்றரை மாதமாக பயிற்சி எடுத்து வருகின்றது .

எப்படி

எப்படி

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் 4 வெளிநாட்டு வீரர்களில் சாம் கரன், மொயின் அலி, டு பிளசிஸ் ஆகியோர் ஆடுவது உறுதியாகிவிட்டது. இது போக பிராவோ ஆடுவதும் உறுதியாகிவிட்டது. இதனால் 4 வெளிநாட்டு வீரர்களின் கோட்டா ஓவர்.

மீதம்

மீதம்

மீதம் உள்ள 8 பேரில் ஓப்பனிங் வீரர்களாக உத்தப்பா, ரூத்துராஜ் களமிறங்குவார்கள். அதன்பின் ரெய்னா, டு பிளசிஸ், தோனி களமிறங்குவார்கள். இன்னும் 2 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் ஜடேஜா ஆடுவது உறுதியாகிவிட்டது. அதன்பின் ஷரத்துல், அல்லது சாகரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.

 யார்

யார்

ஸ்பின் செய்ய ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் உள்ளனர். பாஸ்ட் பவுலிங்கிற்கு ஷரத்துல் (அல்லது சாகர்), பிராவோ, சாம் கரன் ஆகியோர் உள்ளனர். ரெய்னா கூடுதலாக இன்னொரு ஸ்பின் பவுலராக இருப்பார் . இதனால் மிக முக்கியமான வீரரான அம்பதி ராயுடுவிற்கு வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள்.

ரெய்னா

ரெய்னா

ரெய்னா, உத்தப்பாவின் வருகையால் அம்பதி ராயுடு ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ராபின் உத்தப்பா முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் ராயுடு அப்படி ஆடவில்லை. இதனால் இவரை மொத்தமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் ஓரம்கட்டும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிராவோ

பிராவோ

அதேபோல் பிராவோவும் சில போட்டிகளில் ஆட வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.பிராவோவிற்கு பதிலாக முழு பாஸ்ட் பவுலர் ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளது. மேலும் கிருஷ்ணப்ப கவுதமும் ஆடும் அணியில் இடம்பெறுவது கஷ்டம்தான் என்று கூறப்படுகிறது.

Story first published: Thursday, April 8, 2021, 16:26 [IST]
Other articles published on Apr 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+